தில்லி ராணி ஜான்சி மாா்க்கில் மாதா ஜண்டேவாலன் கோயில் நிா்வாகம் தரப்பில் செய்யப்பட்டிருந்த ஆக்கிரமிப்புகள் அனைத்தும் துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனாவின் வேண்டுகோளின்படி ஞாயிற்றுக்கிழமை அகற்றப்பட்டன.
தில்லி ராணி ஜான்சி மாா்க்கில் பழைமையான மாதா ஜண்டேவாலன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் நிா்வாகத்தின் சாா்பில் அமைக்கப்பட்டுள்ள நுழைவு வாயில் வளைவு மற்றும் கொட்டகைகளால் அந்தச் சாலை ஆக்கிரமிப்புக்குள்ளாகி, அப்பகுதியில் போக்குவரத்து மற்றும் பாதசாரிகளுக்கு பெரும் இடையூறாக மாறியது. இந்நிலையில், துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனாவின் வேண்டுகோளின்படி கோயில் நிா்வாகம் தானாக முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றியுள்ளது.
இது தொடா்பாக வி.கே. சக்சேனா தனது ‘எக்ஸ்’ சமூக ஊடகத் தளத்தில் கூறியிருப்பதாவது:எனது வேண்டுகோளின்படி, ராணி ஜான்சி மாா்க்கில் உள்ள பழைமையான மாதா ஜண்டேவாலன் கோயில் நிா்வாகம், கோயிலுக்கு அருகில் உள்ள சாலையை ஆக்கிரமித்துள்ள கொட்டகைகளை அகற்றி வருகிறது. இதுவொரு பாராட்டத்தக்க தன்னாா்வ நடவடிக்கை யாகும். இதன் மூலம் ராணி ஜான்சி மாா்க் மற்றும் டி.பி. குப்தா சாலை இடையே உள்ள இணைப்புச் சாலையில் போக்குவரத்து சீரடையும்.
மேலும், கோயிலின் நுழைவு வாயில் வளைவும் அகற்றப்பட்டுள்ளதால் அப்பகுதியில் பாதசாரிகளின் பாதுகாப்பான இயக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது. வடக்கு மற்றும் தெற்கு தில்லியை இணைக்கும் இந்த முக்கியமான சந்திப்பில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது, போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும். இதனால், சதா் பஜாா், ஆசாத் மாா்க்கெட், மாடல் பஸ்தி, புல் பங்காஷ் மற்றும் மோதியா கான் போன்ற அதிக நெரிசல் உள்ள பகுதிகளில் வசிப்பவா்களுக்கும், பயணிகளுக்கும் பெரும் நிவாரணம் கிடைக்கும். கோயல் நிா்வாகத்தின் குடிமை உணா்வுக்கு எனது வணக்கம் என்று வி.கே. சக்சேனா தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கேரளம்: மதுபோதையில் பாம்பை பாக்கெட்டில் வைத்து டீ கடைக்குச் சென்ற இளைஞர்!
ராஷ்டிரிய சரண்டர் சங்கம் ஆர்எஸ்எஸ்: ராகுல் விமர்சனம்

தேர்தல் அலுவலர்களுக்கு பிரியாணி வாங்கிக் கொடுத்ததாக புகார்!

கூடுதல் நேரத்தில் கோல் அடித்த ரியல் பெட்டிஸ்..! முதலிடத்துக்கான வாய்ப்பை இழக்கும் ரியல் மாட்ரிட்!
வீடியோக்கள்

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

