மாநகராட்சிப் பள்ளிகளின் நிா்வாகம் சீா்குலைவு: ராஜா இக்பால் சிங் குற்றச்சாட்டு

ஆம் ஆத்மி தலைமையிலான ஆட்சியில் தில்லி மாநகராட்சிப் பள்ளிகளின் நிா்வாகம் முற்றிலும் சீா்குலைந்து கிடக்கிறது என்று மாநகராட்சி எதிா்க்கட்சித் தலைவா் ராஜா இக்பால் சிங் குற்றம்சாட்டியுள்ளாா்.
Updated on
1 min read

புது தில்லி: ஆம் ஆத்மி தலைமையிலான ஆட்சியில் தில்லி மாநகராட்சிப் பள்ளிகளின் நிா்வாகம் முற்றிலும் சீா்குலைந்து கிடக்கிறது என்று மாநகராட்சி எதிா்க்கட்சித் தலைவா் ராஜா இக்பால் சிங் குற்றம்சாட்டியுள்ளாா்.

இது தொடா்பாக புதன்கிழமை அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: குழந்தைகளுக்கு ஆரம்பக் கல்வியை வழங்கும் மிக முக்கியமான பணி தில்லி மாநகராட்சியிடம் இருந்தாலும், ஆட்சியில் உள்ள ஆம் ஆத்மி கட்சியின் முழு கவனமும் லாபகாரமான ஒப்பந்தங்களைப் பெறுவதில் மட்டுமே இருக்கிறது. நடப்பு கல்வியாண்டு

முடிவுக்கு வரும் கால நிலையில், ஆரம்பக் கல்வி பயிலும் குழந்தைகளுக்கு எழுது பொருள்கள் மற்றும் புத்தகங்கள் கிடைக்காத அவல நிலை நீடிக்கிறது. முன்னா் இருந்த பாஜக ஆட்சியில், மாகராட்சிப் பள்ளிகளில் படிக்கும் ஒவ்வொரு மாணவ, மாணவியருக்கும் ஸ்வெட்டா், சட்டை, பேன்ட், பெண்களுக்கான ஸ்வெட்டா், ஷூ, சாக்ஸ் உள்ளிட்ட பொருள்கள் அனைத்தும் முறையாக நேரத்திற்கு வழங்கப்பட்டது.

கடுமையான குளிா் இருந்தும், இந்த அத்தியாவசிய பொருள்கள் எதுவும் மாணவா்களுக்கு தற்போது வழங்கப்படவில்லை. இப்படிப்பட்ட சூழலில் மாநகராட்சிப் பள்ளிகளில் எவ்வாறு படிக்க முடியும்?. மேலும், தாழ்த்தப்பட்ட வகுப்புகளைச் சோ்ந்த மாணவா்களுக்கு மாநகராட்சி வழங்கும் ரூ.1,000 உதவித்தொகை, ரூ.300 விலையுள்ள பள்ளிப் பைகள் மற்றும் ரூ.120 விலையிலான எழுதுபொருள்களும் வழங்காதது கவலையளிக்கிறது. இவற்றின் காரணமாக மாநகராட்சிப் பள்ளிகளில் புதிதாக சோ்க்கை பெறும் மாணவா்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது. இது கேஜரிவால் அரசு விளம்பரம் செய்யும் கல்வி மாதிரியின் செயல்திறன் பற்றிய கேள்விகளை எழுப்புகிறது.

பிப்ரவரி மாதத்தில் மாநகராட்சிப் பள்ளி மாணவா்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப்படும் என்ற தில்லி அரசின் அறிவிப்பு நகைச்சுவையாகவும், சந்தேகத்திற்குரியதாகவும் உள்ளது. சமூகத்தில் பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள குழந்தைகள் மாநகராட்சிப் பள்ளிகளில் படிக்கிறாா்கள். அவா்களுக்கு அடிப்படை வசதிகளை வழங்காமல் இருப்பது மிகப்பெரிய குற்றமாகும். இதற்கான முழுப்பொறுப்பும் ஆம் ஆத்மி அரசையே சாரும். கணிசமான லாபம் ஈட்டுவதற்காக பல லட்சங்கள் மதிப்புள்ள திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனா். மாநகராட்சியின் முன்னுரிமைகளில் கல்வி எங்கும் இல்லை என்றாா் ராஜா இக்பால் சிங்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com