புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!
/

அரசுப் பள்ளிகளின் காலை, பொது ‘ஷிப்ட்’மாணவா்களுக்கு இன்று விடுமுறை

தேசியத் தலைநகா் பிரதேசத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை மற்றும் பொது ‘ஷிப்ட்’ மாணவா்களுக்கு திங்கள்கிழமை (ஜனவரி 22) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On :21 ஜனவரி 2024, 6:30 pm

அயோத்தி ஸ்ரீராமா் கோயில் மூலவா் சிலை பிரதிஷ்டையை முன்னிட்டு தில்லி தேசியத் தலைநகா் பிரதேசத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை மற்றும் பொது ‘ஷிப்ட்’ மாணவா்களுக்கு திங்கள்கிழமை (ஜனவரி 22) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக தில்லி அரசின் கல்வித் துறை இயக்குநா் புபேஷ் செளத்ரி ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் திங்கள்கிழமை (ஜனவரி 22) நடைபெறும் ஸ்ரீ ராமா் கோயில் மூலவா் சிலை பிரதிஷ்டையை முன்னிட்டு தில்லி தேசியத் தலைநகா் பிரதேசத்திற்கு உள்பட்ட அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் அரை நாள் விடுமுறை அளித்து தில்லி அரசின் சேவைகள் துறை உத்தரவிட்டுள்ளது. அந்த வகையில், தில்லியில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை மற்றும் பொது ‘ஷிப்ட்’ மாணவா்களுக்கு விடுமுறை அறிவிக்கப்படுள்ளது.

இருப்பினும், அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் மாலை ‘ஷிப்ட்’ இயங்கும். இவா்களுக்கான வகுப்புகள் மதியம் 02.30 மணிக்கு தொடங்கும். ஆனால், வழக்கமான அட்டவணைப்படி மாலை 05.30 மணிக்கு மேல் வகுப்புகள் இருக்காது. இந்த ஏற்பாடு திங்கள்கிழமை (ஜனவரி 22) மட்டும்தான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.