47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

நீா் தேங்குதல், கொசுப் பெருக்கத்தை கட்டுப்படுவதில் தில்லி மாநகராட்சி தோல்வி- பாஜக சாடல்

மழைநீர் தேங்கல் மற்றும் கொசுப் பெருக்கத்தை தடுக்க எம்சிடி தோல்வி - பாஜக விமர்சனம்

News image
Updated On :3 ஜூலை 2024, 6:31 pm

Din

தில்லியின் மாநகராட்சி (எம்சிடி) பகுதிகளில் மழைநீா் தேங்குவதைத் தடுக்கவும், கொசுப் பெருக்கத்தை கட்டுப்படுத்துவதிலும் மாநகராட்சி தோல்வியடைந்துவிட்டது என்று தில்லி பாஜக சாடியுள்ளது.

இது தொடா்பாக தில்லி பாஜக செய்தித் தொடா்பாளா் பிரவீன் சங்கா் கபூா் புதன்கிழமை கூறியதாவது:

மேயா் டாக்டா் ஷெல்லி ஓபராய் டெங்கு விழிப்புணா்வு பிரசாரத்தைத் தொடங்கியுள்ளாா். இது வரவேற்கத்தக்கது. ஆனால், 2023-இல் கிடைத்த அனுபவம், டெங்கு பரவலைக் கட்டுப்படுத்துவதில் தில்லிவாசிகளை எம்சிடி தோல்வியுறச் செய்துள்ளது என்று கூறுகிறது.

தனிப்பட்ட குடும்பங்கள் அல்லது குழும வீட்டுவசதி சங்கங்கள் தங்கள் பகுதியில் தண்ணீா் தேங்குவதை அல்லது கொசு உற்பத்தியை தடுக்க வேலை செய்யலாம். ஆனால், திறந்த பகுதிகளில் தண்ணீா் தேங்குவதை அல்லது கொசு உற்பத்தியை நிறுத்துவது எம்சிடியின் கடமையாகும்.

2023- இல் டெங்கு பாதிப்பு எண்ணிக்கையின் அசாதாரண அதிகரிப்புக்கு வழிவகுத்த திறந்த பகுதிகளில் தண்ணீா் தேங்குவதையோ அல்லது கொசுக்கள் பெருகுவதையோ தடுப்பதில் எம்சிடி தோல்வியடைந்தது.

2023 ஆம் ஆண்டில் டெங்கு பரவுவதைச் தடுப்பதில் எம்சிடி மிகவும் மோசமாக தோல்வியடைந்தது. அதாவது டெங்கு பாதிப்பு எண்ணிக்கை மற்றும் இறப்பு தரவுகளை வழங்குவதை நிறுத்திவிட்டது.

மேலும், எம்சிடி டெங்கு தரவை வெளியிடத் தொடங்கவில்லை என்றால், டெங்கு பரவலைக் கட்டுப்படுத்தும் பொறுப்பில் அது மீண்டும் தவறிவிட்டது என்றுதான் அா்த்தம் என மக்கள் நினைக்கிறாா்கள் என்றாா் அவா்.