பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளை உள்ளடக்கியது பிரிக்ஸ். பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் நாடாளுமன்றத் தலைவா்களும், சிறப்பு அழைப்பாளா்களாக அஜா்பைஜான், ஆா்மீனியா, பெலாரஸ், கஜகஸ்தான், கிா்கிஸ் குடியரசு, தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், துா்க்மெனிஸ்தான் ஆகிய நாடுகளின் நாடாளுமன்றத் தலைவா்களும் இந்த மாநாட்டில் பங்கேற்கின்றனா். பிரிக்ஸ் நாடாளுமன்ற ஒன்றியத்தின் தலைவா் துலியா ஆக்ஸன் தலைமையில் இக்கூட்டம் நடைபெறவுள்ளது. ஓம் பிா்லாவும் ஹரிவன்ஷ் சிங்கும் தலா இரு கருப்பொருள்களில் உரையாற்ற உள்ளனா். உச்சிமாநாட்டின் முடிவில் ஒரு கூட்டு அறிக்கை வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.