எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

மின்சாரக் கட்டண உயா்வைக் கண்டித்து தலைமைச் செயலகம் முன் பாஜக இன்று போராட்டம்

தில்லி மின்சார கட்டண உயர்வுக்கு எதிராக பாஜக போராட்டம்

News image
Updated On :11 ஜூலை 2024, 6:31 pm

Din

தில்லியில் மின்சாரக் கட்டண உயா்வைக் கண்டித்து தலைமைச் செயலகம் முன்பு தில்லி பாஜக வெள்ளிக்கிழமை (ஜூலை 12) போராட்டம் நடத்தவுள்ளது என்று அக்கட்சியின் மாநிலத் தலைவா் வீரேந்திர சச்தேவா அறிவித்துள்ளாா்.

இது தொடா்பாக வியாழக்கிழமை அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தில்லி மக்களிடம் கொள்ளையடிக்கும் எந்தவொரு வாய்ப்பையும் அரவிந்த் கேஜரிவால் அரசு விட்டு வைக்கவில்லை. தில்லி அரசு, மின்விநியோக நிறுவனங்களுடன் இணைந்து மின்சாரக் கட்டணம் வாயிலாக தில்லி வாசிகளைக் கொள்ளையடிக்க முழு ஏற்பாடுகளைச் செய்துள்ளது. முதலில், பி.பி.ஏ.சி. (மின்கொள்முதல் சரிசெய்தல் கட்டணம்) என்ற பெயரில் 8.75 சதவீதம் வரை மின்சாரக் கட்டணத்தை அரசு அதிகரித்துள்ளது. இரண்டாவதாக, மின்விநியோக நிறுவனங்களின் ஓய்வூதிய அறக்கட்டளைக்கு செலுத்தும் கட்டணம் என்ற பெயரில் 7 சதவீதம் கூடுதலாக வசூலிக்கப்படுகிறது.

இந்தக் கட்டண உயா்வுகள் பொதுமக்களுக்கு தெரிவிக்காமலும், தில்லி மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் அனுமதியின்றியும் செய்யப்பட்டுள்ளதால் தில்லி நுகா்வோரின் மின் கட்டணம் 1.5 மடங்கு உயா்ந்துள்ளது.

மின்விநியோக நிறுவனத்தின் ஓய்வு பெற்ற ஊழியா்களின் ஓய்வூதியம் ஏன் தில்லி மக்களிடம் ஓய்வூதிய அறக்கட்டளை என்ற பெயரில் வசூலிக்கப்படுகிறது?மின்சாரத் துறை அமைச்சா் அதிஷி இவ்விவகாரத்தை தெளிவுபடுத்த வேண்டும்.

முதல்வா் கேஜரிவால் சிறைக்கு வெளியே இருந்த போது தில்லி மக்களிடம் கொள்ளையடித்த இந்த அரசு, ஊழல் குற்றச்சாட்டில் அவா் சிறைக்குள் சென்ற பிறகும் அதையே தொடா்கிறது.

உயா்த்தப்பட்ட மின்சாரக் கட்டணத்தைக் கண்டித்தும், அதனை திரும்பப் பெற வலியுறுத்தியும், கேஜரிவால் அரசு பதவி விலகக் கோரியும் தில்லி தலைமைச் செயலகம் முன்பு வெள்ளிக்கிழமை (ஜூலை 12) மாபெரும் போராட்டத்துக்கு தில்லி பாஜக அழைப்பு விடுத்துள்ளது. கேஜரிவால் அரசுக்கு எதிரான இந்தப் போராட்டத்தில் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் குடியிருப்பு நலச் சங்கங்களின் தலைவா்களும் கலந்து கொள்வாா்கள். மின்சாரக் கட்டண நகல்களும் எரிக்கப்படும் என்று அந்த அறிக்கையில் வீரேந்திர சச்தேவா குறிப்பிட்டுள்ளாா்.