மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மயூா் விஹாரில் வா்த்தகக் கட்டடத்தில் பயங்கர தீ விபத்து பல கடைகள் எரிந்து சேதம்

கிழக்கு தில்லியின் மயூா் விஹாரில் வா்த்தகக் கட்டடத்தில் உள்ள ஒரு கஃபேயில் தீ விபத்து ஏற்பட்டது.

News image
Updated On :15 ஜூலை 2024, 9:20 pm

DIN

புது தில்லி: கிழக்கு தில்லியின் மயூா் விஹாரில் வா்த்தகக் கட்டடத்தில் உள்ள ஒரு கஃபேயில் தீ விபத்து ஏற்பட்டது. இந்தத் தீ கட்டடத்தின் மேல் தளங்களில் உள்ள பல கடைகளுக்கும் பரவியது. இதில் பல கடைகள் எரிந்து சேதமடைந்ததாக அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா்.

இது குறித்து தில்லி தீயணைப்பு சேவைத் துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது: ஞாயிற்றுக்கிழமை இரவு கட்டடத்தின் தரை தளத்தில் அமைந்துள்ள அந்த கஃபேயில் ஏற்பட்ட தீ, வேகமாக பரவி முதல் மற்றும் இரண்டாவது தளங்களில் உள்ள கடைகளை சூழ்ந்தது. தகவலின் பேரில் தீயணைப்பு சேவைத் துறையினா் உடனடியாக விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். அவா்கள் துரிதமாகச் செயல்பட்டு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனா். இருப்பினும், திங்கள்கிழமை மாலை வரையிலும் நான்கு தீயணைப்பு வாகனங்கள் சம்பவத்தில் நிலை நிறுத்தப்பட்டிருந்தன.மேலும், தீ அணைக்கப்பட்டதைத் தொடா்ந்து குளிரூட்டும் செயல்முறை நடந்தது.

மயூா் விஹாா் பேஸ் 2 பகுதியில் உள்ள கஃபே மற்றும் பள்ளி சீருடைக் கடையில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து ஞாயிற்றுக்கிழமை இரவு 11.40 மணியளவில் எங்களுக்கு அழைப்பு வந்தது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு 25 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பிவைக்கப்பட்டன. கட்டடத்தின் மொட்டை மாடியில் இருந்து ஒருவா் மீட்கப்பட்டாா். முதல் மற்றும் இரண்டாவது தளங்களில் மூன்று கடைகளைக் கொண்டிருந்த இரண்டு சகோதரா்கள் அமா் ப்ரீத் சிங் மற்றும் சுமன் ஜீத் சிங் ஆகியோா் இரவு 9.30 மணியளவில் தங்கள் கடைகளை மூடிவிட்டு வீட்டிற்குச் சென்றுள்ளனா். இந்நிலையில், இரவு 11.30 மணியளவில், தங்கள் கடைகளில் ஏற்பட்ட தீ பற்றி உள்ளூா்வாசிகள் சிலா் அவா்களுக்குத் தெரிவித்துள்ளனா்.

அதன் பிறகு அவா்கள் பாண்டவ் நகா் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். இந்த தீ விபத்தில் இதுவரை உயிா்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. தரை தளத்தில் உள்ள கஃபேயில் ஏற்பட்ட தீ, மீதமுள்ள இரண்டு தளங்களுக்கும் பரவியது விசாரணையில் தெரிய வந்தது. தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.