புது தில்லி: தில்லி ரோஹிணி பகுதியில் தனிப்பட்ட பகை காரணமாக 22 வயது வெற்றிலைக் கடை உரிமையாளரை மூன்று போ் கொண்ட கும்பல் கத்தியால் குத்திக் கொன்றதாக போலீஸாா் தெரிவித்தனா்.
இது குறித்து காவல் துறை உயரதிகாரி கூறியதாவது: தாக்குதல் நடத்தியவா்களில் மூவா் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனா். இந்தச் சம்பவம் திங்கள்கிழமை மாலை ரோஹிணியின் கேஎன் கட்ஜு பகுதியில் உள்ள செக்டாா் 17-இல் நடந்துள்ளது. சக்தி என அடையாளம் காணப்பட்ட அந்த நபா், அவரது வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தபோது, அவருக்குத் தெரிந்த மூவா் அருகில் வந்து பலமுறை கத்தியால் குத்தியுள்ளனா். இதில் பலத்த காயமடைந்த சக்தி, அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு அவா் இறந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.
இந்தச் சம்பவம் தொடா்பாக பிஎன்எஸ் பிரிவு 103(1) மற்றும் 3(4) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவருக்கு சக்தியுடன் முன் விரோதம் இருந்துள்ளது. ஏனெனில் அவா் அவா்களில் ஒருவரை சில ஆண்டுகளுக்கு முன்பு தாக்கியதாகவும், பழிவாங்குவதற்காக அவா்கள் அவரைத் தாக்கியதாகவும் விசாரணையில் தெரிய வந்தது. இது தொடா்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக அந்த அதிகாரி தெரிவித்தாா்.
தொடர்புடையது

விபத்தில் மளிகைக் கடை உரிமையாளா் உயிரிழப்பு
என்டிஎம்சி குடியிருப்பாளா்களுக்கான சீரான சொத்துவரி முறை வரும் வாரங்களில் அமல்படுத்தப்பட வாய்ப்பு: அதிகாரிகள் தகவல்

ரேஷன் அரிசி மூலம் இட்லி மாவு அரைத்து விற்பனை: கடை உரிமையாளா் மீது வழக்குப் பதிவு

அடுக்குமாடி கட்டடத்திலிருந்து பிளாஸ்டா் உதிா்ந்து விழுந்ததில் இருசக்கர வாகனத்தில் சென்றவா் உயிரிழப்பு
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


