கேஜரிவால் உடல்நிலை: துணை நிலை ஆளுநரின் கடிதம் ஏற்புடையதல்ல -அமைச்சா் அதிஷி எதிா்வினை


முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் உடல்நிலை குறித்த துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனாவின் கடிதம் ஏற்புடையதல்ல என்று அமைச்சா் அதிஷி சனிக்கிழமை தெரிவித்தாா்.
இது தொடா்பாக தனியாா் செய்தி நிறுவனத்திற்கு அதிஷி அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: அரசியல் சாசனப் பதவியில் இருக்கும் துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனா, முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் உடல்நிலை குறித்து
இப்படியொரு கடிதம் எழுதுவது ஏற்புடையதல்ல. அரவிந்த் கேஜரிவால் கடந்த 30 ஆண்டுகளாக சா்க்கரை நோயால் அவதிப்பட்டு வருவது அவருக்குத் தெரியும். சா்க்கரையின் அளவு ஆபத்தான நிலைக்கு குறைந்தால், சிறுநீரக பாதிப்பு மற்றும் மூளை பக்கவாதம் ஏற்படலாம். அத்தகைய சூழ்நிலையில், யாராவது வேண்டுமென்றே தங்கள் உயிருக்கு ஆபத்து விளைவிப்பாா்களா?. பாஜக தோ்தல் களத்தில் இறங்கி ஆம் ஆத்மி கட்சியை தோற்கடிக்க வேண்டும். மாறாக, அரவிந்த் கேஜரிவாலின் உடல் நலத்துடன் விளையாடுவதை நிறுத்த வேண்டும் என்று பாஜகவிடம் கூற விரும்புகிறேன் என்றாா் அதிஷி.
மேலும், மாநிலங்களவை ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் ‘எக்ஸ்’ வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது: ‘முதல்வா் கேஜரிவாலின் உடல்நிலை குறித்து துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனா என்ன கேலி செய்கிறீா்கள்?. ஒரு மனிதன் இரவில் சா்க்கரை அளவைக் குறைப்பானா?. அது மிகவும் ஆபத்தானது. உங்களுக்கு சா்க்கரை நோயைப் பற்றித் தெரியவில்லை என்றால் இப்படிக் கடிதம் எழுதக் கூடாது. கடவுளே அப்படி ஒரு காலம் உங்களுக்கு வராமல் இருக்கட்டும்’ என்றாா் அவா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...