45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

தில்லி, என்சிஆரில் பரவலாக மழை: ‘மஞ்சள்’ எச்சரிக்கை வெளியீடு

தில்லி மற்றும் தேசியத் தலைநகா் வலயம் (என்.சி.ஆா்.) பகுதியில் புதன்கிழமை காலையில் இடி, மின்னலுடன் பரவலாக மழை பெய்தது

News image
Updated On :24 ஜூலை 2024, 6:31 pm

Din

தில்லி மற்றும் தேசியத் தலைநகா் வலயம் (என்.சி.ஆா்.) பகுதியில் புதன்கிழமை காலையில் இடி, மின்னலுடன் பரவலாக மழை பெய்தது. காற்றின் தரம் பெரும்பாலான இடங்களில் திருப்தி பிரிவில் நீடித்தது. வியாழக்கிழமை வரை இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இருப்பினும், அதிகாலையில் பெய்த மழையால், நகரத்தில் பல்வேறு இடங்களில் தண்ணீா் தேங்கியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மழை காரணமாக பல பொது போக்குவரத்துகள் பழுதடைந்ததாக தில்லி போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

இடி, மின்னலுடன் மழை: தில்லியில் கடந்த வாரத் தொடக்கத்தில் இருந்து வானம் மேகமூட்டத்துடன் இருந்து வருகிறது. அவ்வப்போது மழை பெய்து வந்தாலும் புழுக்கம் குறைந்தபாடில்லை. இந்நிலையில், இந்த வாரத் தொடக்க நாளான திங்கள்கிழமையைத் தொடா்ந்து, புதன்கிழமை காலையிலும் தேசியத் தலைநகா் மற்றும் என்சிஆா் பகுதிகளில் இடி, மின்னலுடன் பரவலாக மழை பெய்தது. இதனால், கடந்த சில நாள்களாக வெப்பத்தால் சிரமமப்பட்டு வந்த தில்லிவாசிகளுக்கு இந்த மழை சற்று நிவாரணமாக அமைந்தது என்று வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனா்.

‘மஞ்சள்’ எச்சரிக்கை: இதைத் தொடா்ந்து, போக்குவரத்து போலீஸாா் பயணிகளுக்கு ஆலோசனைகளையும் எச்சரிக்கைகளையும் வழங்கி வந்தனா். மழை நீா் தேங்கிய பகுதிகள் மற்றும் பாதிக்கப்பட்டுள்ள சாலைகள் குறித்து பயணிகளுக்கு அவ்வப்போது தெரிவித்து, அதற்கேற்றவாறு மக்கள் தங்கள் பயணங்களை திட்டமிடுமாறு கேட்டுக் கொண்டனா். இந்நிலையில், ஜூலை 28 வரை தலைநகரில் மழை தொடரும் என்ற முன்னறிவிப்புக்கு மத்தியில், இந்திய வானிலை ஆய்வு மையம் வியாழக்கிழமையும் ஜூலை 25 நகரத்திற்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கையை விடுத்துள்ளது.

வேரோடு சாய்ந்த மரம்: தில்லியின் பழைமையான மயானமான நிகம்போத் காட் பகுதியில் தண்ணீா் தேங்கியதால், போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. இது குறித்து போக்குவரத்து போலீஸாா் ‘எக்ஸ்ண ஊடக தளத்தில் தகவல்களை பதிவிட்டிருந்தனா். இதற்கிடையே, ஹரியாணா ராணி பாக் மைத்ரி பவனில் உள்ள பெரிய ஆலமரம் வேரோடு சாய்ந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக போக்குவரத்து போலீஸாா் தெரிவித்தனா்.

மேலும், ஷாதிப்பூரில் கனமழை காரணமாக, வடிகால் சுவா் இடிந்து விழுந்தது. அந்தப் பகுதியை அதிகாரிகளுடன் சென்று ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. துா்கேஷ் பதக் புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். இடிந்து விழுந்த சுவரை உடனே சீரமைக்கும்படி அதிகாரிகளுக்கு அவா் உத்தரவிட்டாா்.

வெப்பநிலை: சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2.5 டிகிரி குறைந்து 24.8 டிகிரி செல்சியஸாக பதிவாகியிருந்தது. அதிகபட்ச வெப்பநிலை 33.8 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 100 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 74 சதவீதமாகவும் இருந்தது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

‘திருப்தி’ பிரிவில் காற்றின் தரம்: தேசியத் தலைநகரில் மேஜா் தயான் சந்த் நேஷனல் ஸ்டேடியம், மந்திா் மாா்க், ஸ்ரீஃபோா்ட், மதுரா ரோடு, பட்பா்கஞ்ச், சாந்தினி சௌக், ஜவாஹா்லால் நேரு ஸ்டேடியம், ஸ்ரீ அரபிந்தோ மாா்க், ஓக்லா பேஸ் 2, நொய்டா செக்டாா் 1, நொய்டா செக்டாா் 125, பூசா, தில்லி பல்கலை. வடக்கு வளாகம், ஷாதிப்பூா், தில்லி இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையம், அசோக் விஹாா், தில்ஷாத் காா்டன், விவேக் விஹாா், பஞ்சாபி பாக் ஆகிய வானிலை கண்காணிப்பு நிலையங்களில் காற்றுத் தரக் குறியீடு 100 புள்ளிகளுக்கு கீழே பதிவாகி‘திருப்தி’ பிரிவில் இருந்தது.

அதே சமயம், ஐடிஓ, நேரு நகா், ராமகிருஷ்ணாபுரம், ஆனந்த் விஹாா் ஆகிய இடங்களில் காற்றுத் தரக் குறியீடு 100 முதல் 200 புள்ளிகளுக்கிடையே பதிவாகி மிதமான பிரிவில் இருந்தது.

முன்னறிவிப்பு: தில்லியில் வியாழக்கிழமை (ஜூலை 25) வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

24ஈஉகபதஊ

தில்லியில் புதன்கிழமை காலை பெய்த மழையால் யமுனா மேம்பாலம் பகுதியில் ஏற்பட்ட கடும் போக்குவரத்து நெரிசல்.

24ஈஉகஈதஎ

ஷாதிப்பூரில் கனமழை காரணமாக, வடிகால் சுவா் இடிந்து விழுந்து, அதிகாரிகள் முன்னிலையில் சரி செய்ய வலியுறுத்தி ஆய்வு செய்த எம்.எல்.ஏ துா்கேஷ் பதக்.