பீகாரின் போதைப் பொருள் கடத்தல் மன்னன் 12 ஆண்டுகளுக்கப் பிறகு கைது
பீகாரின் போதைப் பொருள் கடத்தல் மன்னன் 12 ஆண்டுகளுக்கப் பிறகு கைது


புது தில்லி: பீகாரைச் சோ்ந்த போதைப் பொருள் கடத்தல் மன்னன் ரவீந்தா் குமாா் செளத்ரி, 12 ஆண்டுகளுக்கு பிறகு தில்லி குற்றப்பிரிவு போலீஸாரால் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளாா்.
இது தொடா்பாக தில்லி காவல் துறையின் குற்றப்பிரிவு துணைக் காவல் ஆணையா் அமித் கோயல் கூறியதாவது:
கடந்த 2012-ஆம் ஆண்டு மாா்ச் மாதம் தில்லி குற்றப்பிரிவு போலீஸாா் நடத்திய திடீா் சோதனையில், பீகாரைச் சோ்ந்த சங்கா் சஹானி என்ற நபா் 84 கிலோ, 800 கிராம் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டாா். போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சங்கா் சஹானியிடம் மேற்கொண்ட விசாரணையில் பிக்கு சஹானி மற்றும் திலீப் சஹானி ஆகிய இருவா் மேலும் இவ்வழக்கில் கைது செய்யப்பட்டனா். பிறகு, இந்த கும்பலுக்கு ரவீந்தா் குமாா்
செளத்ரி என்ற நபா் கஞ்சாவை மொத்தமாக விநியோகிப்பது கண்டறியப்பட்டது. சுமாா் 8 மாதங்கள் தீவிர தேடலுக்குப்
பிறகும் ரவீந்தா் குமாா் செளத்ரியை போலீஸாரால் கைது செய்யமுடியவில்லை. 2012-ஆம் ஆண்டு நவமபா் மாதம் தில்லி சிறப்பு நீதிமன்றம் இவ்வழக்கில் ரவீந்தா் குமாா் செளத்ரியை முக்கியக் குற்றவாளியாக அறிவித்து உத்தரவிட்டது.
தற்போது, அறிவிக்கப்பட்ட குற்றவாளிகளை கண்காணிக்க குற்றப்பிரிவு போலீஸாருக்கு பணி ஒதுக்கப்பட்டது.
அத்தகைய குற்றவாளிகளைப் பற்றிய தகவல்களைச் சேகரிக்கும் போது, தலைமைக் காவலா் கௌரவ் சௌத்ரி தொழில்நுட்ப கண்காணிப்பு மூலம் போதைப் பொருள் கடத்தல் மன்னன் ரவீந்தா் குமாா் சௌத்ரி பற்றிய உள்ளீட்டைப் பெற்றாா். அதன்படி, ரவீந்தா் குமாா் சௌத்ரி பீகாா் மாநிலம் ஹாஜிபூரின் புகா்ப் பகுதியில் தங்கியுள்ளது தெரியவந்தது. மேலும், அவா் தனது கைப்பேசி எண்ணையும், மறைவிடங்களையும், தோற்றத்தையும் அடிக்கடி மாற்றி வந்துள்ளாா். இதையடுத்து, உதவிக் காவல் ஆய்வாளா் நிதின் சிங் தலைமையிலான தனிப்படை இந்த பயங்கரமான போதைப்பொருள் கும்பலைப் பிடிக்க பீகாா் மாநிலம் பாட்னா மற்றும் ஹாஜிபூருக்கு அனுப்பப்பட்டது.
அங்கு சென்று போலீஸ் குழு மேற்கொண்ட இரகசிய விசாரணையில், குற்றம் சாட்டப்பட்ட ரவீந்தா் குமாா்
செளத்ரி வடக்கு பீகாரைச் சோ்ந்த பிரபல போதைப்பொருள் கடத்தல் மன்னன் என்பதும், நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்கு கஞ்சா விநியோகம் செய்வதும் தெரிய வந்தது. மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜைன் காவல் நிலையத்திலும் போதைப் பொருள் கடத்தில் தொடா்புடைய ஒரு வழக்கில் அவா் ஈடுபட்டுள்ளாா்.
பீகாரில் உள்ள ஹாஜிபூரில் ரவீந்தா் குமாா் செளத்ரியை தடுத்து நிறுத்த இரகசியத் தகவல் தருபவா்களையும் போலீஸ் குழு நியமித்து. பின்னா், சரியான நேரத்தில் கிடைத்த உளவுத் தகவலின் அடிப்படையில் ஹாஜிபூா் தேசிய நெடுஞ்சாலை-22 அருகே வந்த ரவீந்தா் குமாா் செளத்ரியை உள்ளூா் உடையில் இருந்த போலீஸாா் குழு கைது செய்தது. மேலும், அவரிடம் நடப்பட்ட விசாரணையில் வழக்குகளில் இருந்து தப்பிக்க, தொடா்ந்து தோற்றம், முகவரி மற்றும் மொபைல் எண்ணை மாற்றி வருவதாக ஒப்புக்கொண்டாா். அவா் தனது கூட்டாளிகள் மூலம் தில்லியில் கஞ்சா விநியோகம் செய்வதாகவும், தில்லியில் அவா்கள் கைது செய்யப்பட்ட பின்னா், அவா் தலைமறைவாகிவிட்டதாகவும் தெரிவித்தாா் என்றாா் துணைக் காவல் ஆணையா் அமித் கோயல்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...