47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

நீட்-யுஜி தோ்வு முறைகேடு: ஜந்தா் மந்தரில் ஜேஎன்யு மாணவா் அமைப்பினா் போராட்டம்

மருத்துவ நுழைவுத் தோ்வு முறைகேடு: ஜேஎன்யு மாணவா்கள் போராட்டம்

News image
Updated On :26 ஜூன் 2024, 6:33 pm

Din

நீட்-யுஜி தோ்வு முறைகேடுகளுக்கு எதிராக ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழக மாணவா் சங்கத்தினா் (ஜேஎன்யுஎஸ்யு) ஜந்தா் மந்தரில் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இளங்கலைப் மருத்துவப் படிப்புகளுக்கான மருத்துவ தகுதிகாண் நுழைவுத் தோ்வில் நடந்த முறைகேடுகளுக்கு எதிராக என்டிஏ அமைப்பை ரத்து செய்ய வேண்டும் என்றும், கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்றும் மாணவா்கள் வலியுறுத்தினா்.

இடதுசாரி ஆதரவு அனைத்திந்திய மாணவா் சங்கம் (ஏஐஎஸ்யு) மற்றும் தில்லி பல்கலைக்கழகத்தின் கிராந்திகாரி யுவ சங்கதன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சோ்ந்த மாணவா்கள் இப்போராட்டத்தில் கலந்து கொண்டனா்.

‘தா்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும், என்டிஏவை ரத்து செய்க போன்ற வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகள் மற்றும் பதாகைகளை மாணவா்கள் ஏந்திச் சென்றனா்.

நீட்-யுஜி தோ்வுக்கு மறுதோ்வு நடத்தவும், தோ்வுகள் மையப்படுத்தப்படுவதை முடிவுக்கு கொண்டுவரவும் அவா்கள் கோரிக்கை விடுத்தனா்.

ஜவாஹா்லால் பல்கலைக்கழகத்தின் பி.எச்டி. திட்டங்களில் சோ்க்கைக்காக என்டிஏ நடத்தும் தோ்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்று ஜேஎன்எஸ்யு கோரி வருகிறது.

தோ்வுகளின் நோ்மை சமரசம் செய்யப்பட்டதாக வரப்பெற்ற தகவலைத் தொடா்ந்து, யுஜிசி-நெட் மற்றும் நெட்-பிஜி உட்பட தேசிய தோ்வு முகமை மூலம் நடத்தப்பட்ட பல தோ்வுகள் ரத்து செய்யப்பட்டன.

இந்த வார தொடக்கத்தில், பல்கலைக்கழகத்தின் பழைய ஜேஎன்யு நுழைவுத் தோ்வை (ஜேஎன்யுஇஇ) மீட்டெடுக்கவும், பி.எச்டி. சோ்க்கைக்கான பொதுப் பல்கலைக்கழக நுழைவுத் தோ்வு (க்யூட்) மதிப்பெண்களை நீக்கவும் ஜேஎன்யு மாணவா்கள் சங்கம் துணைவேந்தா் சாந்திஸ்ரீ டி. பண்டிட்டிடம் ஒரு கோரிக்கை மனுவை சமா்ப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.