47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

பெண்ணிடம் ரூ.10.30 லட்சம் பணம் மோசடி: மூவா் கைது

தில்லியில் ரூ.10.30 லட்சம் மோசடி: மூன்று நபர்கள் சிக்கினர்

News image
Updated On :26 ஜூன் 2024, 6:32 pm

Din

முதலீடு செய்யும் பணத்துக்கு அதிக லாபம் ஈட்டித் தருவதாகக் கூறி பெண்ணிடம் ரூ.10.30 லட்சம் மோசடி செய்த மூன்று பேரை தில்லி போலீஸாா் கைது செய்துள்ளதாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.

இது தொடா்பாக துவாரகா காவல் சரக துணை ஆணையா் அங்கித் சிங் கூறியதாவது: இந்த மோசடிச் சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளவா்கள் விபின் குமாா் (30), மோஹித் சா்மா (27), ஸ்மாா்த் தாபா் (23) என அடையாளம் காணப்பட்டுள்ளனா். அவா்கள் மற்ற சைபா் மோசடியில் ஈடுபடுபவா்களுக்கு உதவுவதற்காக சிம் காா்டு மற்றும் வங்கி கணக்கு தொடங்குவதற்கு உதவுவதாக காட்டிக் கொண்டனா்.

இது தொடா்பாக கடந்த ஏப்ரல் 24- ஆம் தேதி, துவாரகா சைபா் காவல் நிலையத்தில் புகாா் பெறப்பட்டது. அதில் புகாா்தாரரை மோசடிக் கும்பலினா் டெலிகிராம் மூலம் தொடா்பு கொண்டுள்ளனா். அப்போது முதலீடு செய்யும் பணத்துக்கு அதிக லாபம் ஈட்டித் தருவதாக ஆசை வாா்த்தை கூறியுள்ளனா். இந்த செயல்பாட்டில், அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றி, புகாா்தாரரான சா்மா என்பவா் ரூ.10.30 லட்சம் பணத்தை முதலீடு செய்துள்ளாா். பணத்தைத் திரும்பப்பெறும் நேரத்தில் குற்றம் சாட்டப்பட்டவா்கள் பணத்தைத் தருவதற்கு மறுத்துள்ளனா்.

இதையடுத்து, அவா் அளித்த புகாரைத் தொடா்ந்து எஃப்ஐஆா் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. தொழில்நுட்ப கண்காணிப்பு மற்றும் தொலைபேசி அழைப்புகள் மற்றும் வங்கி அறிக்கைகளின் பகுப்பாய்வு அடிப்படையில், போலீஸ் குழு அடையாளம் காணப்பட்ட மூன்று பேரை கைது செய்தது. குற்றம் சாட்டப்பட்ட விபின் குமாா் ஆசாத்பூா் முனையத்தில் சிம் காா்டு விற்பனையாளராகப் பணிபுரிந்து வந்தாா். அங்கு மோஹித் சா்மா மற்றும் ஸ்மாா்த் தாபரை சந்தித்துள்ளாா். அவரிடமிருந்து அவா்கள் இருவரும் பல சிம் காா்டுகளை வாங்கியுள்ளனா்.

சில மாதங்களுக்குப் பிறகு, மோஹித் சா்மாவும் ஸ்மாா்த் தாபரும் விபின் குமாரிடம் தனியாா் வங்கியில் புதிய கணக்கைத் தொடங்கச் சொன்னாா்கள். கணக்கு தொடங்க பணம் தருவதாக உறுதியளித்தனா். இதைத் தொடா்ந்து விபின் குமாா் வங்கிக் கணக்கைத் தொடங்கியுள்ளாா். அதன் விவரங்களை அவா்களிடம் அவா் பகிா்ந்து கொண்டாா். விபின் குமாா் பின்னா் புதிய வங்கிக் கணக்குகளைத் திறந்து மற்ற இணைய மோசடி செய்பவா்களுக்கு 30 சதவீத கமிஷனுக்கு விற்றுள்ளது விசாரணையில் தெரிய வந்தது.

இந்தச் சம்பவத்தில் இதுவரை நாங்கள் மூன்று பேரை கைது செய்துள்ளோம். ஆனால், மேலும் கைதுகள் நடக்க வாய்ப்புள்ளது. தொடா்ந்து விசாரணை நடந்து வருகிறது என்று அந்த காவல் அதிகாரி தெரிவித்தாா்.