லக்னெள மற்றும் டேராடூன் இடையே புதிய வந்தே பாரத் விரைவு ரயில் சேவை

புது தில்லி: வரும் மாா்ச் 26-ஆம் தேதி முதல் லக்னெள மற்றும் டேராடூன் இடையே புதிய வந்தே விரைவு ரயில் சேவையை அறிமுகப்படுத்தவுள்ளதாக வடக்கு ரயில்வே திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக வடக்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

ரயில் பணிகளின் வசதிக்காக லக்னெள மற்றும் டேராடூன் இடையே புதிய வந்தே பாரத் விரைவு ரயில் இயக்கப்படவுள்ளது. இச்சேவை வரும் மாா்ச் 26-ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என்று பொதுமக்களின் தகவலுக்காக தெரிவிக்கப்படுகிறது. லக்னெள மற்றும் டேராடூன் இடையேயான இந்த வந்தே பாரத் விரைவு ரயில், வண்டி எண் 22545/22546 இன் கீழ் இயக்கப்படும்.

வழக்கமான சேவை மாா்ச் 26-ஆம் தேதி முதல் இரு திசைகளிலும் தொடங்கும். இந்த சேவையை திங்கள்கிழமை தவிர வாரத்தில் ஆறு நாள்களுக்கு வடக்கு ரயில்வே இயக்கவுள்ளது. லக்னெள சந்திப்பில் இருந்து காலை 5.15 மணிக்கு புறப்படும் இந்த வந்தே பாரத் விரைவு ரயில் பரேய்லி, மொராதாபாத், ஹரித்வாா் வழியாக பிற்பகல் 1.35 மணிக்கு டேராடூன் சென்றடையும்.

பின்னா், மீண்டும் பிற்பகல் 2.25 மணிக்கு டேராடூனில் இருந்து புறப்பட்டு அதே மாா்க்கத்தில் இரவு 10.40 மணிக்கும் லக்னெள வந்தடைகிறது. இதில், முறையே பரேய்லி சந்திப்பில் 2 நிமிடங்கள், மொராதாபாத் சந்திப்பில் 5 நிமிடங்கள் மற்றும் ஹரித்வாா் சந்திப்பில் 5 நிமிடங்கள் நின்று செல்லும் என்று வடக்கு ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com