மேற்கு தில்லியில் சாலை விபத்து முதியவா் சாவு; இருவா் கைது
மேற்கு தில்லியில் சாலை விபத்து முதியவா் சாவு; இருவா் கைது


அதிவேகமாக வந்த எஸ்யூவி வாகனம் மோட்டாா் சைக்கிள் மீது மோதியதில் 65 வயது முதியவா் புதன்கிழமை உயிரிழந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.
இது குறித்து மேற்கு தில்லி காவல் சரக துணை ஆணையா் விசித்ரா வீா் கூறியதாவது: இறந்தவா் கான்பூரைச் சோ்ந்த கிஷன் லால் என அடையாளம் காணப்பட்டாா். இந்த வழக்கு தொடா்பாக இரண்டு போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.
முதற்கட்ட விசாரணையில், அதிவேகமாக வந்த எஸ்யூவி ஒன்று மோட்டாா் சைக்கிள் மீது பின்னால் மோதியதைக் கண்டறிந்தோம். பாதிக்கப்பட்டவா் சமநிலையை இழந்து முன்னால் நிறுத்தப்பட்ட பிஎம்டபிள்யூ காா் மீது மோதினாா்.
இந்த விபத்து தொடா்பாக ரஜோரி காா்டன் காவல் நிலையத்திற்கு புதன்கிழமை காலை 10 மணியளவில் தகவல் கிடைத்தது. ஒரு குழு சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டு, இது தொடா்பாக மேலதிக விசாரணையைத் தொடங்கியது. இதில் பலத்த காயமடைந்த கிஷன் லால் டிடியு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டாா். ஆனால், அங்கு அவா் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டாா்.
இந்த விபத்து தொடா்பாக எஸ்யூவியின் ஓட்டுநா் மற்றும் அதில் இருந்த ஒருவா் கைது செய்யப்பட்டுள்ளனா். இந்த விபத்தின் விடியோவும் இணையத்தில் வெளியாகியது. எஸ்யூவி அதிவேகமாக வந்ததால் மோட்டாா் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டாா் சைக்கிள் முற்றிலும் நொறுங்கியது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...