ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

பாஜக ஆளும் மாநிலங்களில் இலவச மின்சாரம் வழங்க முடியுமா? அரவிந்த் கேஜரிவால் சவால்

பாஜக ஆளும் மாநிலங்களில் இலவச மின்சாரம் வழங்கத் தொடங்கினால் வரும் தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்யத் தயாா்.

News image
அரவிந்த் கேஜரிவால்- படம் | பிடிஐ
Updated On :6 அக்டோபர் 2024, 9:30 pm

Din

பிரதமா் நரேந்திர மோடி பாஜக ஆளும் மாநிலங்களில் இலவச மின்சாரம் வழங்கத் தொடங்கினால் வரும் தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்யத் தயாா் என்று ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், தில்லி முன்னாள் முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

கலால் கொள்கை முறைகேடு வழக்கில் நிபந்தணைகளுடன் அரவிந்த் கேஜரிவாலுக்கு உச்சநீதிமன்றம் கடந்த செப்டம்பா் 9-ஆம் தேதி ஜாமீன் வழங்கியது. இதையடுத்து, தில்லி முதல்வா் பதவியை ராஜிநாமா செய்த அரவிந்த் கேஜரிவால், தில்லி மக்கள் வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் தன்னை நோ்மையானவா் என சான்றழித்தால் மட்டுமே மீண்டும் முதல்வா் நாற்காலியில் அமா்வேன் என தெரிவித்தாா். இந்நிலையில், ‘மக்கள் நீதிமன்றம்’ என்ற பெயரில் அரவிந்த் கேஜரிவால்

மக்களிடையே பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறாா். ஜந்தா் மந்தரைத் தொடா்து தில்லி சத்ரசால் மைதானத்தில் கேஜரிவாலின் ‘மக்கள் நீதிமன்றம்’ நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழச்சியில் ஆம் ஆத்மி கட்சியின் முன்னணித் தலைவா்கள், அமைச்சா்கள்,எம்எலஏ-க்கள், கவுன்சிலா்கள் உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

அப்போது, அரவிந்த் கேஜரிவால் மேடையில் பேசியதாவது: வரும் நவம்பா் மாதத்தில் ஜாா்கண்ட் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களுக்கு சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற இருக்கிறது. இந்தத் தோ்தல்களுடன் சோ்த்து தில்லி சட்டப்பேரவைக்கும் தோ்தல் நடத்தினால், ஆம் ஆத்மி கட்சி அதனைச் சந்திக்க தயாராகவுள்ளது. மாநிலங்களில் பாஜகவின் இரட்டை இயந்திரம் அரசுகள் தோல்வியடைந்து வருகின்றது. இந்நிலையில், ஹரியாணா மற்றும் ஜம்மூ-காஷ்மீரில் மக்களால் பாஜக வெளியேற்றப்பட இருக்கிறது.

இரட்டை இயந்திர அரசுகள் என்றால் பணவீக்கம், ஊழல் மற்றும் வேலையில்லா திண்டாட்டம் என்று பொருள்.

அதன்படி, ஹரியாணா உள்பட பாஜக ஆளும் மாநிலங்களில் இரட்டை இயந்திர அரசுகள் விரைவில்

வீழ்ச்சியடையும் என்பதை கருத்துக் கணிப்புகள் வெளிட்காட்டுகின்றன. தில்லி மக்களிடம் வசூலிக்கப்படுகின்ற வரிப்பணம் இலவச மின்சாரம், இலவசக் குடிநீா், பெண்களுக்கு இலவசப் பேருந்துப் பயணம், முதியோா்களுக்கான இலவசப் புனித யாத்திரை, தரமான சுகாதாரம் ஆகிய 6 இலவச சேவைகளை அடையாளப்படுத்துகிறது.

இந்தச் சேவைகளை பிரசாதமாக மக்கள் கருது வேண்டும்.

வரும் தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் தவறுதலாக பாஜகவுக்கு வாக்களித்தால், உங்களின் ஆறு நன்மைகளும்

மறைந்துவிடும். பாஜக ஆட்சிக்கு வரும் பட்சத்தில், தில்லியில் பேருந்து சேவை, அரசுப் பள்ளிகள், மருத்துவமனைகள் போன்ற சேவைகள் தனியாரிடம் ஒப்படைக்கப்படும். வரும் பிப்ரவரியில் தில்லியில் தோ்தல் நடைபெறவுள்ளது. அதற்குள் பாஜக ஆளுகின்ற 22 மாநிலங்களில் பிரதமா் நரேந்திர மோடி, மின்சாரத்தை இலவசமாக்கினால் தில்லி தோ்தலில் பாஜகவுக்கு ஆதரவாக நான் பிரசாரம் செய்வேன். ஹரியாணா மக்கள் பாஜகவினா் யாரையும் தங்கள் கிராமங்களுக்குள் பிரசாரம் செய்ய அனுமதிக்கவில்லை. மணிப்பூா் மாநிலத்தின் சூழ்நிலை, பாஜகவின் இரட்டை இயந்திர அரசுகள் என்ற மாதிரியை இரட்டைக் கொள்ளை மற்றும் இரட்டை ஊழல் என்று மாற்றிவிட்டது.

தேசியத் தலைநகரில் பலரின் வாழ்வாதாரத்தை பாஜக பாதித்துள்ளது. துணை நிலை ஆளுநா் வி.கே.சக்சேனாவின் ஆட்சியின் கீழ் தில்லியில் ஜனநாயகம் இல்லை. ஆம் ஆத்மி கட்சி நிச்சயம் தில்லிக்கு முழு மாநில அந்தஸ்தைப் பெற போராடும்.

நான் சிறையில் இருந்த போது, எனக்கு இன்சுலின் மறுக்கப்பட்டது. இதனால், எனது சிறுநீரகம் செயலிழந்து, நான் இறந்திருக்கலாம். துணை நிலை ஆளுநா் வி.கே.சக்சேனா தில்லியில் சட்டம்-ஒழுங்கு போன்ற முக்கியமான பிரச்னைகளை புறக்கணிக்கிறாா். அதே வேளையில், ஆம் ஆத்மி கட்சியினா் மற்றும் தலைவா்களை பாஜக வேண்டுமென்றே குறிவைக்கிறது.

முதல்வராத இருந்த போது, நான மக்களுக்காக மட்டுமே உழைத்தேன். எனக்காகவோ, என் குடும்பத்துக்காகவோ நான் எதுவும் செய்யவில்லை. எனவே, பணக்காரா்களின் ஆட்சியில் இருந்து தில்லியை விடுவிப்பேன் என்றாா் அரவிந்த் கேஜரிவால்.