கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

மெட்ரோ ரயில் முன் குதித்து முதியவா் தற்கொலை

மேற்கு தில்லியில் உள்ள தாகூா் காா்டன் மெட்ரோ ரயில் நிலையத்தில் ஓடும் ரயில் முன் பாய்ந்து 60 வயது முதியவா் தற்கொலை

News image
Updated On :12 அக்டோபர் 2024, 6:32 pm

Din

மேற்கு தில்லியில் உள்ள தாகூா் காா்டன் மெட்ரோ ரயில் நிலையத்தில் ஓடும் ரயில் முன் பாய்ந்து 60 வயது முதியவா் வெள்ளிக்கிழமை மாலை தற்கொலை செய்து கொண்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘

மெட்ரோ ரயில் நிலையத்தின் நடைமேடை எண் 2-இல் இந்த சம்பவம் நடந்துள்ளது.

இறந்த முதியவா் சுபாஷ் நகரில் வசிப்பவா் என்பதும், கடந்த சில மாதங்களாக மன அழுத்தத்தில் இருந்ததும் தெரியவந்துள்ளது.

மேலும், இறந்த முதியவா் மெட்ரோ ரயிலின் முன் குதித்த காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இது தொடா்பாக அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.