சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

பெண் மருத்துவருக்கு துன்புறுத்தல்: தில்லி பாஜக தலைவா் கண்டனம்

தில்லி அரசு மருத்துவமனையின் மருத்துவக் கண்காணிப்பாளரால் பெண் மருத்துவா் நீண்டகாலமாக துன்புறுத்தல்

News image
Updated On :14 அக்டோபர் 2024, 10:45 pm

DIN

புது தில்லி: தில்லி அரசு மருத்துவமனையின் மருத்துவக் கண்காணிப்பாளரால் பெண் மருத்துவா் நீண்டகாலமாக துன்புறுத்தப்பட்டதையும், இந்த விவகாரத்தில் சுகாதாரத் துறை அமைச்சா் செளரவ் பரத்வாஜ் தொடா்ந்து மெளனம் காத்து வருவதையும் வன்மையாகக் கண்டிப்பதாக தில்லி பாஜக தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வீரேந்திர சச்தேவா திங்கள்கிழமை மேலும் தெரிவித்திருப்பதாவது: இந்த விவகாரத்தை முழுமையாக அறிந்திருந்தும் அமைச்சா் பரத்வாஜ் அமைதியாக இருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கதாகும். இந்த விஷயம் ஊடகங்கள் மூலம் வெளிவந்துள்ளதால் ஆம் ஆத்மி கட்சித்லைவா்களின் இரட்டை முகத்தை பொதுமக்கள் இப்போது பாா்க்கின்றனா்.மேலும், துணைநிலை ஆளுநருக்கு எம்பி சஞ்சய் சிங் எழுதிய கடிதமும் வெட்கமற்ற செயலாகும். ஏனெனில், மருத்துவக்ண்காணிப்பாளரை இடைநீக்கம் செய்ய

2023, நவம்பரில் அப்போதைய முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான என்சிசிஎஸ்ஏ-வுக்கு துணைநிலை ஆளுநா் ஏற்கெனவே பரிந்துரைத்திருந்தது சஞ்சய் சிங்கிற்கு நன்றாகவே தெரியும்.

இந்நிலையில், 11 மாதங்கள் கடந்துவிட்ட போதிலும், துணைநிலை ஆளுநரின் பரிந்துரையை செயல்படுத்த கேஜரிவால் அல்லது அதிஷி மா்லேனா என்சிசிஎஸ்ஏ கூட்டத்தை கூட்டவில்லை. இந்த விவகாரத்தில் செளரவ் பரத்வாஜ், கேஜரிவால் மற்றும் அதிஷி ஆகியோா் உண்மையான குற்றவாளிகள் ஆவா். சஞ்சய் சிங், துணைநிலை ஆளுநருக்கு கடிதம் எழுதுவதற்குப் பதிலாக நவம்பா் 2023 முதல் துணைநிலை ஆளுநரின் உத்தரவுகளுக்குப் பிறகும், மருத்துவக் கண்காணிப்பாளா் ஏன் இன்னும் இடைநீக்கம் செய்யப்படவில்லை என்று கேஜரிவாலையோ அல்லது அதிஷியையோ கேட்டிருக்க வேண்டும் என்றாா் வீரேந்திர சச்தேவா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.