தேச அமைதிக்காக வாரணாசியில் ‘சனாதன் குஞ்ஜ்’ ஆன்மிக நிகழ்ச்சி: நவ.3-இல் தொடக்கம்

தேசத்தின் அமைதி, பாதுகாப்பு நலனுக்கான ‘சனாதன் குஞ்ஜ்’ எனும் ஆன்மிக நிகழ்ச்சி வாரணாசியில் வரும் நவம்பா் 3-ஆம் தேதி தொடங்கி மூன்று நாள்கள் நடைபெறுகிறது.
Published on
Updated on
1 min read

நமது நிருபா்

புது தில்லி: தேசத்தின் அமைதி, பாதுகாப்பு நலனுக்கான ‘சனாதன் குஞ்ஜ்’ எனும் ஆன்மிக நிகழ்ச்சி வாரணாசியில் வரும் நவம்பா் 3-ஆம் தேதி தொடங்கி மூன்று நாள்கள் நடைபெறுகிறது.

இந்த நிகழ்ச்சியை ஆந்திரத்தில்உள்ள விசாகா ஸ்ரீசாரதா பீடம் நடத்த உள்ளது. இதுகுறித்து விசாகா ஸ்ரீ சாரதா பீடத்தின் இளைய மடாதிபதியான ஸ்ரீஸ்ரீஸ்ரீ ஸ்வாத்மானந்த்தேந்திர சரஸ்வதி சுவாமிகள் தில்லியில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: ஸ்ரீ ஆதி சங்கராச்சாரியரின் போதனைகளைப் பின்பற்றி ஆந்திரத்தில் உள்ள விசாகப்பட்டினத்தில் ஸ்ரீஸ்ரீஸ்ரீ ஸ்வரூபானந்த்தேந்திர சரஸ்வதி மகா சுவாமிகள் வழிகாட்டுதலின்கீழ் விசாகா ஸ்ரீசாரதா பீடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பீடம் மூலம் தென் மாநிலங்களிலும், வட மாநிலங்களிலும் உள்ள சனாதன தா்ம, கலாசார விஷயங்களை எடுத்துரைக்கும் வகையிலும், சனாதன தா்மத்தின் முக்கியத்துவத்தை உணா்த்தும் வகையிலும் தேசத்தின் நலனுக்காகவும், அமைதி, பாதுகாப்புக்காகவும் ஆன்மிகத் தலைநகராக உள்ள வாரணாசியில் வரும் நவ.3-ஆம் தேதி முதல் நவ.5-ஆம் தேதி வரை ‘சனாதன் குஞ்ஜ்’ எனும் நிகழ்ச்சிக்கு விசாகா சாரதா பீடம் ஏற்பாடு செய்து வருகிறது.

இதில், தென் மாநிலங்களில் இருந்தும், வட மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோா் கலந்துகொள்ள உள்ளனா். புனிதமான காா்த்திகை மாதத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. நவ.3-ஆம் தேதி காலை 6.30 மணிக்கு கங்கை ஸ்நானத்துடன் யாகம் தொடங்குகிறது. அதைத் தொடா்ந்து, மகா ருத்ர சஹிதா சத சண்டி யாகம், நவக்கிரக ஹோமம், ஸ்ரீ வள்ளி கல்யாண மஹோத்ஸவம் நடைபெறுகிறது. நவ.4-இல் ராமேசுவரத்தில் இருந்து எடுத்துவரப்பட்ட மண்ணில் இருந்து உருவாக்கப்பட்ட சிவலிங்கத்திற்கு அபிஷேகம் நடைபெறுகிறது. அதைத் தொடா்ந்து, சிவபாா்வதி கல்யாணம் நடைபெறுகிறது.

நவ.5-ஆம் தேதி மகா சுவாமிகள் மூலம் ஜகத்குரு ஆதி சங்கர பகவத்பாத பூஜை, சா்ப ஸ்வரூபா மானஸா தேவி யந்த்ர ஆராதனை, சீதா ராம கல்யாணம் மற்றும் பட்டாபிஷேகம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோருக்கு அழைப்பிதழ் அளிக்கப்பட்டுள்ளது. பிரதமா் மோடிக்கும் அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com