ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

மகாராஷ்டிரா தோ்தலில் ஆம் ஆத்மி போட்டியிடவில்லை! சஞ்சய் சிங் எம்.பி. பேட்டி

மகாராஷ்டிராவில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடாது.

News image
Updated On :26 அக்டோபர் 2024, 6:58 pm

Din

மகாராஷ்டிராவில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடாது என்றும் அதற்கு பதிலாக, கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவால், மகா விகாஸ் அகாடி (எம்விஏ) கூட்டணிக்காக பிரசாரம் மேற்கொள்வாா் என்று மாநிலங்களவை ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் தெரிவித்தாா்.

இது தொடா்பாக சனிக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: வருகின்ற மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தோ்தலில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடவில்லை. இந்த நிலையில், மகா விகாஸ் அகாடி கூட்டணியில் உள்ள சிவசேனா (உத்தவ் தாக்கரே பிரிவு), தேசியவாத காங்கிரஸ் (சரத் பவாா் பிரிவு) மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் வேட்பாளா்களை ஆதரித்து ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் பிரசாரம் செய்வாா். கேஜரிவால் பிரசாரம் மேற்கொள்ள வேண்டி மகா விகாஸ் அகாடி கூட்டணிக் கட்சிகளின் தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில், ஜாா்கண்ட் சட்டப்பேரவைத் தோ்தலில் முதல்வா் ஹேமந்த் சோரனின் ஆளும் ஜாா்கண்ட் முக்தி மோா்ச்சாவுக்கு ஆதராவக கேஜரிவால் பிரச்சாரம் செய்ய உள்ளாா் என்றாா் சஞ்சய் சிங்.

மகாராஷ்டிராவில் மொத்தம் 288 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இங்கு, வரும் நவ.20-ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜாா்க்கண்டில் வரும் நவ.13 மற்றும் 20 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்த இரு மாநிலங்களிலும் பதிவான வாக்குகள் நவ. 23 ஆம் தேதி எண்ணப்படும்.

சமீபத்திய மக்களவைத் தோ்தலில் பாஜகவை எதிா்த்துப் போராடுவதற்காக ‘இந்தியா’ கூட்டணி உருவாக்கப்பட்டது.

மக்களைத் தோ்தலில் தில்லி, குஜராத் மற்றும் ஹரியாணா ஆகிய மாநிலங்களில் காங்கிரஸுடன் தொகுதிப் பங்கீடு மேற்கொண்ட ஆம் ஆத்மி கட்சி, தோ்தலில் கூட்டணி பலத்துடன் போட்டியிட்டது. ஆனால், பஞ்சாபில் அக்கட்சி தனித்துப் போட்டியிட்டது. இதைத் தொடா்ந்து, ஹரியாணாவில் சமீபத்தில் நடந்த சட்டப்பேரவைத் தோ்தலில் சுயேச்சையாக போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சி, ஒரே தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.