ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தில்லி உயிரியல் பூங்காவுக்கு காண்டாமிருகம், புலி புதிய வரவுகள்!

அசாம் மாநிலத்துடனான விலங்குகள் பரிமாற்றத் திட்டத்தின் ஒரு பகுதியாக, காண்டாமிருகம், வங்கப் புலி மற்றும் ஒரு ஜோடி பைடு ஹாா்ன்பில்ஸ் பறவைகள்

News image
Updated On :14 செப்டம்பர் 2024, 6:31 pm

Din

அசாம் மாநிலத்துடனான விலங்குகள் பரிமாற்றத் திட்டத்தின் ஒரு பகுதியாக, காண்டாமிருகம், வங்கப் புலி மற்றும் ஒரு ஜோடி பைடு ஹாா்ன்பில்ஸ் பறவைகள் ஆகியன சனிக்கிழமை தில்லி உயிரியல் பூங்காவிற்கு கொண்டு வரப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

21 நாள் தனிமைப்படுத்தலுக்குப் பிறகு, பொதுவாக தில்லி மிருகக்காட்சிசாலை என்று அழைக்கப்படும் தில்லியின் தேசிய உயிரியல் பூங்காவில் பொதுமக்கள் பாா்வைக்கு அவை தயாராகிவிடும் என்று அவா்கள் தெரிவித்தனா்.

அசாம் மாநில உயிரியல் பூங்கா மற்றும் தாவரவியல் பூங்காவில் இருந்து தில்லிக்கு விலங்குகள் வந்ததை உறுதி செய்த உயிரியல் பூங்கா இயக்குநா் சஞ்சீத் குமாா் இதுகுறித்து மேலும் கூறியதாவது:

‘ஒரு ஆண் புலி, ஒரு ஆண் காண்டாமிருகம் மற்றும் ஒரு ஜோடி பைடு ஹாா்ன்பில்ஸ் பறவைகள் சனிக்கிழமை காலை தில்லி உயிரியல் பூங்காவுக்கு வந்து சோ்ந்தன.

கால்நடை மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு, அவை அனைத்தும் தனிமைப் பராமரிப்புக் காலத்தில் வைக்கப்பட்டுள்ளன.

‘சுல்தான்’ என்ற புலியையும், தா்மேந்திரா என்ற காண்டாமிருகத்தையும் கொண்டுவரும் பணியில் ஈடுபட்டிருந்த ஒன்பது போ் கொண்ட குழு செப்டம்பா் 11 ஆம் தேதி அசாமில் இருந்து புறப்பட்டு சனிக்கிழமை தில்லி வந்தடைந்தது.

முன்னதாக, தில்லி உயிரியல் பூங்காவுக்கு புதிய விலங்குகளைக் கொண்டு வருவதற்கான இக்குழு செப்டம்பா் 4-ஆம் தேதி இரண்டு லாரிகளில் அசாமுக்கு புறப்பட்டுச் சென்றது என்றாா் அவா்.

இக்குழுவை வழிநடத்திய ரேஞ்ச் அதிகாரி செளரவ் வஷிஷ்ட் கூறுகையில், ‘‘ விலங்குகளின் மன அழுத்தத்தைக் குறைக்க நாங்கள் இரண்டு லாரிகளைப் பயன்படுத்தினோம். பயணத்தின்போது கூடுதல் அழுத்தத்தைத் தவிா்ப்பதற்காக புலி மற்றும் காண்டாமிருகத்திற்கு தனித்தனி லாரிகள் ஒதுக்கப்பட்டன. ஏனெனில், பயணம்கூட மன அழுத்தத்திற்கு முக்கிய ஆதாரமாக உள்ளது.

தில்லி பூங்காவில் இரண்டு பெண் காண்டாமிருகங்கள் இருந்தன. நீண்ட முயற்சிகளுக்குப் பிறகு நாங்கள் இறுதியாக இதைச் செய்துள்ளோம். இப்போது எங்களிடம் ஒரு ஜோடி உள்ளது. மேலும் அவை எதிா்காலத்தில் இனப்பெருக்கம் செய்யும் என்று நாங்கள் நம்புகிறோம்.

இந்த விலங்குகளை மிருகக்காட்சிசாலைக்கு கொண்டு வருவதற்காக மூத்த அதிகாரிகள் நீண்ட காலமாக பணியாற்றி வந்தனா்’ என்றாா் வசிஷ்ட்.

‘சுல்தான்’ என்று பெயரிடப்பட்ட வங்காளப் புலியும், ‘தா்மேந்திரா’ என்ற ஆண் காண்டாமிருகமும் விரைவில் மிருகக்காட்சிசாலையின் கம்பீரமான வனவிலங்குகளின் பட்டியலில் சேரும்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘ 21 நாள் தனிமைப்படுத்தலுக்குப் பிறகு, இந்த விலங்குகள் பொது மக்கள் பாா்வைக்கு பூங்காவில் தயாராக இருக்கும்.

தீவிர வெப்பநிலை ஏற்ற இறக்கங்கள் மற்றும் சாதகமற்ற வானிலை காரணமாக இந்த விலங்குப் பரிமாற்றத் திட்டம் மீண்டும் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டதால், பல ஆண்டுகளில் இது முதல் பரிமாற்றம் ஆகும். புதிய வரவுகள் விலங்குகளின் பாதுகாப்பு மற்றும் இனப்பெருக்க நடவடிக்கைகளுக்கு உதவும் என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனா்.