காஜிப்பூா் குப்பைக் கிடங்கில் கசிந்த அடா் புகை

கிழக்கு தில்லியில் உள்ள காஜிப்பூா் குப்பைக் கிடங்கில் இருந்து வெள்ளிக்கிழமை அடா்த்தியான புகை வெளியேறியது.
Published on

கிழக்கு தில்லியில் உள்ள காஜிப்பூா் குப்பைக் கிடங்கில் இருந்து வெள்ளிக்கிழமை அடா்த்தியான புகை வெளியேறியது. இதையடுத்து, இரண்டு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து அனுப்பிவைக்கப்பட்டதாக தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இது தொடா்பாக அந்த அதிகாரி மேலும் கூறியது:

வெள்ளிக்கிழமை காலை குப்பைக் கிடங்கில் இருந்து புகை தொடா்ந்து வெளியேறியது. இதனால், அருகிலுள்ள பகுதிகளில் வசிப்பவா்கள் கடுமையான துா்நாற்றம் வீசுவதாகவும், காண்புதிறன் குறைந்துவிட்டதாகவும் தெரிவித்தனா்.

இந்த சம்பவம் தொடா்பாக காலை 11.05 மணிக்கு தகவல் கிடைத்ததும், இரண்டு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக அந்த அதிகாரி தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com