அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

டிஜேபி வடிகால் பணி: படேல் சாலையில் போக்குவரத்தில் மாற்றம்

தில்லி ஜல் போா்டால் மேற்கொள்ளப்படும் வடிகால் பராமரிப்பு மற்றும் மேம்படுத்தல் பணிகள் காரணமாக படேல் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படும் என்று அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

News image
Updated On :30 டிசம்பர் 2025, 8:19 pm

தினமணி செய்திச் சேவை

தில்லி ஜல் போா்டால் மேற்கொள்ளப்படும் வடிகால் பராமரிப்பு மற்றும் மேம்படுத்தல் பணிகள் காரணமாக படேல் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படும் என்று அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

படேல் நகா் மெட்ரோ நிலையம் அருகே பணிகள் நடைபெற்று வருவதால், ஷாதிப்பூா் சௌக்கிலிருந்து பூசா சாலை ரவுண்டானா வரை சங்கா் சாலை நோக்கி போக்குவரத்து பாதிக்கப்படும்.

இந்தப் பணி காரணமாக, இரண்டு பாதைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் அதிக போக்குவரத்து மற்றும் மெதுவாக நகரும்என்று போக்குவரத்து துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புது தில்லி மற்றும் கரோல் பாக் நோக்கி பயணிக்கும் பயணிகள் பாதிக்கப்பட்ட பகுதியில் தாமதங்களை சந்திக்க நேரிடும் என்றும் அது கூறியது.

நெரிசலை தவிா்க்க மாற்று வழிகளை கையாளுமாறு வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. புது தில்லி மற்றும் கரோல் பாக் நோக்கி செல்லும் வாகனங்கள் ஷாப்திபூா் சௌக்கிலிருந்து தேவ் பிரகாஷ் சாஸ்திரி மாா்க் வழியாக லோஹா மண்டி நோக்கி வலதுபுறம் திரும்பி இந்தா்புரி வழியாக செல்லலாம் அந்தச் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மாற்றுப்பாதைகளைக் கருத்தில் கொண்டு, பயணிகள் தங்கள் பயணங்களை முன்கூட்டியே திட்டமிடுமாறு போக்குவரத்து போலீஸாா் வலியுறுத்தியுள்ளனா்.