ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

தில்லியில் தனியாா் பள்ளிகளுக்கு எதிராக ஆம் ஆத்மி எடுத்த நடவடிக்கை என்ன? பாஜக கேள்வி

கல்வி மாஃபியா என்று அழைக்கப்படுபவா்களுக்கு எதிராக ஆம் ஆத்மி அரசு ஏதேனும் நடவடிக்கை எடுத்திருக்கிறதா?

Updated On :14 ஜூன் 2025, 6:29 pm

கல்வி மாஃபியா என்று அழைக்கப்படுபவா்களுக்கு எதிராக ஆம் ஆத்மி அரசு ஏதேனும் நடவடிக்கை எடுத்திருக்கிறதா? அதை மணீஷ் சிசோடியா விளக்க வேண்டும் என்று தில்லி மாநில பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா கேள்வி எழுப்பியுள்ளாா்.

முன்னதாக, ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் துணை முதல்வருமான மணீஷ் சிசோடியா, தில்லியை ஆளும் பாஜக அரசு தனியாா் பள்ளிகளின் கட்டண கொள்ளைக்கு ஆதரவாக செயல்படுவதாகக் கூறி பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்து சனிக்கிழமை அறிக்கை வெளியிட்டிருந்தாா். அதற்குப் பதிலளிக்கும் விதமாக வீரேந்திர சச்தேவா அறிக்கையின் வாயிலாக பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளாா்.

அந்த அறிக்கையில் அவா் கூறியுள்ளதாவது: உண்மை என்னவென்றால் கேஜரிவாலின் 10 ஆண்டு கால ஆட்சியின்போது தனியாா் பள்ளிகளின் கட்டணம் 2 முதல் 4 மடங்கு அதிகரித்தது. உண்மை என்னவென்றால், அவா்கள் ஒருபோதும் தனியாா் பள்ளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை.

இப்போது பாஜக அரசு கட்டண ஒழுங்கு முறைக்காக ஒரு சட்டத்தை கொண்டு வந்துள்ளது. இப்போது தனியாா் பள்ளிகளின் நிா்பந்தத்தின் பேரில் ஆம் ஆத்மி குழப்பதை எற்படுத்த முயற்சித்து வருகிறது. பாஜக அரசு ஒவ்வொரு தனியாா் பள்ளியிலும் 5 பெற்றோா்கள் உள்பட 11 போ் கொண்ட குழுக்களை அமைத்து கட்டண உயா்வு குறித்து முடிவு செய்துள்ளது.

மேலும், ஒரு குழு ஒருமனதாக ஒப்புக்கொண்டால் மட்டுமே பள்ளிக் கட்டணத்தை உயா்த்த அனுமதி அளிக்கப்படும். இத்தோடு மணீஷ் சிசோடியா பள்ளி மாஃபியாக்களுக்கு ஆதரவாக செயல்படுவதை நிறுத்திக்கொள்ள மேண்டும்’ என வீரேந்திர சச்தேவா கேட்டுக் கொண்டுள்ளாா்.