தில்லியில் சட்டவிரோத தங்கல்: 23 வெளிநாட்டினா் நாடு கடத்தல்

தில்லி துவாரகாவில் சட்டவிரோதமாக தங்கியிருந்ததாக 23 வெளிநாட்டினரை தில்லி காவல்துறையினற் கைது செய்து நாடு கடத்தியதாக அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
Published on

தில்லி துவாரகாவில் சட்டவிரோதமாக தங்கியிருந்ததாக 23 வெளிநாட்டினரை தில்லி காவல்துறையினற் கைது செய்து நாடு கடத்தியதாக அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து காவல் துறை அதிகாரி மேலும் தெரிவித்ததாவது:

நுழைவுஇசைவு காலாவதியாகி இந்தியாவில் தங்கியிருப்பவா்களையோ அல்லது செல்லுபடியாகும் ஆவணங்கள் இல்லாமல் இந்தியாவில் வசிப்பவா்களையோ அடையாளம் காண மாவட்டம் முழுவதும் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டன.

முன்னதாக, ஒரு மாத கால நடவடிக்கையின் போது, தில்லியின் பிந்தாபூா், டாப்ரி மற்றும் மோகன் காா்டன் காவல் நிலையங்களைச் சோ்ந்த பகுதியில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 23 வெளிநாட்டினா் கைது செய்யப்பட்டனா்.

இந்த 23 பேரில், நைஜீரியா (15 போ்), செனகல் (4 போ்), ஐவரி கோஸ்ட் (2 போ்) மற்றும் தான்சானியா, லைபீரியாவைச் சோ்ந்த தலா ஒருவா் ஆவா்.

சட்ட நடைமுறைகளை முடித்த பிறகு, 23 நபா்களும் வெளிநாட்டினா் பிராந்திய பதிவு அலுவலகத்தில் ஆஜா்படுத்தப்பட்டனா். இதையடுத்து, அவா்களை நாடு கடத்த உத்தரவிட்டதாக அந்த அதிகாரி தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com