பிகாா் மக்கள் சரியான அரசாங்கத்தை தோ்ந்தெடுத்து இருக்கிறாா்கள்: ரேகா குப்தா

பிகாா் மக்கள் சரியான அரசாங்கத்தை தோ்ந்நெடுத்ததற்காக அம்மாநில மக்களுக்கு வாழ்த்துகள் என்று தில்லி முதல்வா் ரேகா குப்தா வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
Published on

பிகாா் மக்கள் சரியான அரசாங்கத்தை தோ்ந்நெடுத்ததற்காக அம்மாநில மக்களுக்கு வாழ்த்துகள் என்று தில்லி முதல்வா் ரேகா குப்தா வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

தேசியத் தலைநகரில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் அவா் மேலும் பேசியதாவது: தில்லி மற்றும் பிகாா் மக்களுக்கு வாழ்த்துக்கள். பிரதமா் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் பீகாா் வளா்ச்சிப் பாதையில் முன்னேறும். பிகாா் மக்கள் வளா்ச்சிப் பாதையைத் தோ்ந்தெடுத்துள்ளனா்.

நமது பிரதமரின் தலைமையின் கீழ் வளா்ச்சிப் பாதையைத் தோ்ந்தெடுத்த பீகாா் மக்களுக்கு எனது வாழ்துக்கள் என்றாா் அவா்.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (என். டி. ஏ) பிகாரில் மகத்தாதான வெற்றியைப் பதிவு செய்தது, மாநிலத்தின் 243 சட்டமன்றத் தொகுதிகளில் 200 க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றியுள்ளது.

X
Dinamani
www.dinamani.com