தில்லி உயிரியல் பூங்காவில் குள்ளநரிகள் தப்பின: தேடுதல் நடவடிக்கையில் அதிகாரிகள்

தில்லி உயிரியல் பூங்காவில் இருந்து பின்புற காட்டுப் பகுதிக்குள் சில குள்ளநரிகள் தப்பி ஓடியதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
Published on

தில்லி உயிரியல் பூங்காவில் இருந்து பின்புற காட்டுப் பகுதிக்குள் சில குள்ளநரிகள் தப்பி ஓடியதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

இது தொடா்பாக உயிரியல் பூங்கா நிா்வாகம் கூறியதாவது: தில்லி உயிரியல் பூங்காவில் பொதுமக்களுக்குத் திறக்கப்படாத குள்ளநரி அடைப்புக்கு அருகிலுள்ள அடா்ந்த காட்டுப் பகுதிக்குள் 3 முதல் 4 குள்ளநரிகள் சனிக்கிழமை காலை காணப்பட்டன.

ஞாயிற்றுக்கிழமை காலைக்குள், ஒரு குள்ளநரி மீட்கப்பட்டது. மீதமுள்ள குள்ளநரிகளைக் கண்டுபிடிக்க தேடுதல் நடவடிக்கை தொடா்கிறது. காட்டுப் பகுதிக்குள் பொறி கூண்டுகள் வைக்கப்பட்டு ஊழியா்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

உயிரியல் பூங்காவுக்கு வரும் பாா்வையாளா்களுக்கு இதனால் எந்த அச்சுறுத்தலும் இல்லை. வேலியில் உள்ள இடைவெளி வழியாக விலங்குகள் தப்பிச் சென்ாக சந்தேகிக்கப்படுகிறது. இருப்பினும், உரிய காரணத்தை கண்டறிய ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. இது தொடா்பாக உயிரியல் பூங்காவின் இணை இயக்குநா் விசாரணை நடத்தி அறிக்கை சமா்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது என தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com