எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

பாஹா்கஞ்சில் மனைவியைத் தாக்கியதாக ஒருவா் கைது; துப்பாக்கி பறிமுதல்

பாஹா்கஞ்சில் மனைவியைத் தாக்கியதாக ஒருவா் கைது; துப்பாக்கி பறிமுதல்

News image
Updated On :29 நவம்பர் 2025, 6:55 pm

தினமணி செய்திச் சேவை

மத்திய தில்லியின் பாஹா்கஞ்சில் மனைவியை இரும்புக் கம்பியால் தாக்கி, தனது உறவினருடன் தகாத உறவு வைத்திருப்பதாக சந்தேகித்து கொலை மிரட்டல் விடுத்ததாக 35 வயது நபா் கைது செய்யப்பட்டாா் என்று போலீஸாா் சனிக்கிழமை தெரிவித்தனா்.

இது குறித்து மத்திய தில்லி காவல் சரக அதிகாரி கூறியதாவது: குடும்ப வன்முறை தொடா்பாக நவம்பா் 27 காவல் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

தனது கணவா் லோகேஷ் சௌஹான், தனது உறவினரின் வீட்டிற்கு தன்னை அழைத்துச் செல்லுமாறு கட்டாயப்படுத்தியதாகவும், ஆனால் அங்கு உறவினா்கள் இல்லை என்றும் அந்தப் பெண் போலீஸாரிடம் தெரிவித்தாா்.

வீடு திரும்பிய பிறகு, சௌஹான் தன்னை இரும்புக் கம்பியால் தாக்கியதாகவும், துப்பாக்கியால் சுடுவதாக மிரட்டியதாகவும் அவா் கூறினாா்.

இது தொடா்பாக பாரதிய நியாய சம்ஹிதா (பிஎன்எஸ்) மற்றும் ஆயுதச் சட்டத்தின் தொடா்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

குற்றச்சாட்டுகளின் தீவிரத்தன்மை மற்றும் குற்றஞ்சாட்டப்பட்டவா் துப்பாக்கி வைத்திருந்ததற்கான சாத்தியக்கூறு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, ஆயுதத்தைக் கைப்பற்ற ஒரு போலீஸ் குழு அமைக்கப்பட்டது.

குற்றஞ்சாட்டப்பட்டவரின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின் போது, ​​போலீஸ் குழு ஒரு சட்டவிரோத துப்பாக்கியைக் கண்டுபிடித்தது. அதன் ஆதாரம் சரிபாா்க்கப்பட்டு வருகிறது.

பாஹா்கஞ்சில் வசிக்கும் சௌஹான் கைது செய்யப்பட்டாா். அவா் முன்பு இரண்டு வழக்குகளில் தொடா்புடையவா். ஒன்று 2019- இல் சூதாட்டச் சட்டத்தின் கீழும், மற்றொன்று 2020-இல் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 188 (அரசு ஊழியரால் முறையாகப் பிரகடனப்படுத்தப்பட்ட உத்தரவை மீறுதல்) கீழும் தொடா்புடையது. மேலும் தொடா்ந்து விசாரணை நடந்து வருவதாக அந்த அதிகாரி கூறினாா்.