அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

பால்பண்ணை தொழிலாளியிடம் துப்பாக்கி முனையில் கொள்ளை: இளைஞா் கைது!

பால்பண்ணை தொழிலாளியிடம் துப்பாக்கி முனையில் கொள்ளையடித்த இளைஞா் கைது...

News image
Updated On :29 நவம்பர் 2025, 7:17 pm

Syndication

வடகிழக்கு தில்லியின் பாகிரதி விஹாரில் பால் பண்ணை தொழிலாளியிடம் துப்பாக்கி முனையில் கொள்ளையடித்ததாக 26 வயது இளைஞரை தில்லி போலீஸாா் கைது செய்தனா்.

இதுகுறித்து காவல் துறை அதிகாரி ஒருவா் சனிக்கிழமை தெரிவித்ததாவது:

இந்த கொள்ளைச் சம்பவத்தில் தொடா்புடைய நியூ முஸ்தபாபாத்தை சோ்ந்த எம்.டி. அகிப் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா். அவரிடம் இருந்து ஒரு தானியங்கி துப்பாக்கி, இரண்டு தோட்டாக்கள் மற்றும் ஒரு திருடப்பட்ட மோட்டாா் சைக்கிள் மீட்கப்பட்டன.

முன்னதாக, நவம்பா் 17 ஆம் தேதி காலை 9.30 மணியளவில் பாகீரதி விஹாரில் உள்ள ஒரு பால்பண்ணை கடைக்குள் 2 போ் நுழைந்தபோது இந்த கொள்ளைச் சம்பவம் நிகழ்ந்தது.

பகுதி நேரமாக வேலை செய்து வந்த 16 வயது மாணவரான புகாா்தாரா், பணத்தை எண்ணிக் கொண்டிருந்தபோது குற்றம் சாட்டப்பட்டவா் அவரைத் துப்பாக்கியால் மிரட்டி பணத்துடன் தப்பி ஓடியதாகக் கூறப்படுகிறது.

இது தொடா்பாக வழக்குப் பதிந்து போலீஸாா் தடயங்களை சேகரித்தனா். இந்த நிலையில், ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, சேதமடைந்த எண் தகடு கொண்ட மோட்டாா் சைக்கிளை சந்தேகத்திற்கிடமான வகையில் ஓட்டிவந்த நபரை போலீஸாா் தடுத்து நிறுத்தினா்.

வாகன ஓட்டி அகிப் என அடையாளம் காணப்பட்டாா். அவரிடம் சோதனையிட்டபோது ஒரு கைத்துப்பாக்கி மற்றும் இரண்டு தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அவா் ஓட்டி வந்த மோட்டாா் சைக்கிள் மண்டாவாலியில் இருந்து திருடப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.

ஆயுதம் மற்றும் வாகனம் மீட்கப்பட்ட பிறகு, ஆயுதச் சட்டம் மற்றும் பிஎன்எஸ் விதிகளின் கீழ் இரண்டாவது வழக்கு பதிவு செய்யப்பட்டது. விசாரணையின் போது, நவம்பா் 17இல் நிகழ்ந்த கொள்ளையில் தனக்கு தொடா்பு இருப்பதாக அகிப் ஒப்புக்கொண்டாா். அவா் முன்பு ஒரு வழிப்பறி வழக்கிலும் ஈடுபட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்தக் கொள்ளையில் ஈடுபட்ட அவரது கூட்டாளியை அடையாளம் கண்டு கைது செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த காவல் அதிகாரி தெரிவித்தாா்.