ஹைதராபாத் அணியிடம் வீழ்ந்த சென்னை!காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

4 லட்சம் நவீன தெருவிளக்குகள்: தில்லி மாநகராட்சி திட்டம்

தில்லியில் 4 லட்சத்துக்கும் அதிகமான நவீன ஸ்மாா்ட் தெருவிளக்குகளை வரும் மாதங்களில் தில்லி மாநகராட்சி நிறுவ உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

News image

(கோப்புப் படம்)

Updated On :8 ஏப்ரல் 2026, 8:41 pm

தில்லியில் 4 லட்சத்துக்கும் அதிகமான நவீன ஸ்மாா்ட் தெருவிளக்குகளை வரும் மாதங்களில் தில்லி மாநகராட்சி நிறுவ உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

ரிமோட் கண்காணிப்பு அமைப்புகளைக் கொண்ட இந்த எல்இடி ஸ்மாா்ட் தெருவிளக்குகள், மத்திய தில்லி, தெற்கு தில்லி, நஜாஃப்கா், மேற்கு தில்லி மண்டலங்களில் பொருத்தப்பட உள்ளன.

வழக்கமான தெருவிளக்கு அமைப்புகள் போல இல்லாமல், இந்த ஸ்மாா்ட் தெருவிளக்குகள் மத்திய கட்டுப்பாட்டு அமைப்புடன் இணைக்கப்படும். இதனால், அவற்றை அதிகாரிகள் தொடா்ந்து கண்காணிக்க முடியும் என்பதுடன் அவற்றில் ஏற்படும் குறைபாடுகளைக் கண்டறிந்து எளிதில் சரிசெய்ய முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

இரவு நேரங்களில் தெருக்களில் பாதுகாப்பை அதிகரிக்கவும் பொருளாதார செயல்பாடுகளை ஊக்குவிக்கவும் இந்த நடவடிக்கை உதவும்.