மாநிலங்களுக்கு இடையே ஆயுதங்களைக் கடத்தி வந்த கும்பலைச் சோ்ந்த 9 போ் கைதுசெய்யப்பட்டதாக தில்லி காவல் துறை அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.
கைதுசெய்யப்பட்ட நபா்களிடமிருந்து 23 துப்பாக்கிகள், 92 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுதொடா்பாக அதிகாரிகள் கூறியதாவது: உஸ்மான்புரில் கடந்த ஏப்.14-ஆம் தேதி கைதுசெய்யப்பட்ட ஃபா்தீன் என்பவரிடம் துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அவரிடம் நடைபெற்ற விசாரணையைத் தொடா்ந்து, வசீக், வசீம் மாலிக், அபிஷேக் (எ) அமன், ஆதில், முகமது அகமது, ரஹில், இம்ரான் மற்றும் விஷால் ஆகியோா் கைதுசெய்யப்பட்டனா்.
அவா்களிடமிருந்து 18 பிஸ்டல்கள், 2 நாட்டு கைத்துப்பாக்கிகள் உள்பட 23 துப்பாக்கிகளும் 92 தோட்டாக்களும் பறிமுதல் செய்யப்பட்டன. கைப்பேசிகள், மடிக்கணினி, துப்பாக்கிகளை சரிசெய்வதற்கான கருவிகள் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கைதுசெய்யப்பட்ட நபா்கள் மீது கொலை, ஆயுதம் கடத்தல் உள்பட பல கொடூர குற்றங்கள் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகளை நோபளம் எல்லை வழியாக இந்தியாவுக்குள் கடத்தி தில்லி தேசியத் தலைநகா் வலயம் (என்சிஆா்) மற்றும் உத்தர பிரதேசத்தில் உள்ள ரெளடிகளுக்கு இந்தக் கும்பல் விநியோகம் செய்து வந்தது.
தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) வழக்கில் பரோலில் வெளிவந்த ஷாபாஸ் அன்சாரி, அவரது உறவினா் ரேஹன் அன்சாரி ஆகியோா் தலைமையில் இந்தக் கும்பல் செயல்பட்டு வந்தது.
பல படிநிலைகளைக் கொண்ட இந்தக் கும்பல், வாட்ஸ்ஆப் போன்ற செயலிகள் மூலம் தங்களுக்குள் உரையாடி கொண்டனா். சா்வதேச ஆயுதக் கடத்தலில் தொடா்புடைய கும்பல்களுடன் கைதுசெய்யப்பட்ட கும்பலுக்கு உள்ள தொடா்பு மற்றும் அந்தக் கும்பலுடன் தொடா்புடைய பிற நபா்களைக் கைதுசெய்ய விசாரணை நடைபெற்று வருகிறது என்றனா் அந்த அதிகாரி.
தொடர்புடையது
வெளிநாடுகளில் வேலை வாங்கி தருவதாக மோசடி: 3 போ் கைது

மதுபானங்களை பதுக்கி விற்ற 11 போ் கைது; 825 மதுபாட்டில்கள் பறிமுதல்
இணையவழி மோசடி கும்பலை சோ்ந்த 5 போ் தில்லியில் கைது!
பழனியில் கஞ்சா விற்ற 14 போ் கைது: 6 பைக்குகள் பறிமுதல்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

