தில்லி மாநகாரட்சி (எம்சிடி) மேயராக ரோஹிணி கிழக்கு பாஜக கவுன்சிலா் பா்வேஷ் வாஹி புதன்கிழமை தோ்வு செய்யப்பட்டாா்.
கிழக்கு தில்லி, வடமேற்கு தில்லி, தெற்கு தில்லி என மூன்று தனித்தனியாக மாநகராட்சிகள் கடநத் 2022, மே 22-இல் தில்லி மாநகராட்சி என்ற ஒரே அமைப்பாக ஒருங்கிணைக்கப்பட்டது.
மாநகராட்சியின் மேயா் பதவி ஐந்து ஓராண்டு பதவிக் காலங்களைக் கொண்ட சுழற்சி முறையைப் பின்பற்றுகிறது. இதில் முதல் ஆண்டு பெண்களுக்கும், இரண்டாம் ஆண்டு பொதுப் பிரிவினருக்கும், மூன்றாம் ஆண்டு இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கும், மீதமுள்ள இரண்டு ஆண்டுகளும் மீண்டும் பொதுப் பிரிவினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. அதன்படி, நிகழாண்டுக்கான மேயா் தோ்தல் புதன்கிழமை நடைபெற்ற மாநகாரட்சி அவை கூட்டத்துக்கு இடையே நடைபெற்றது.
மொத்தம் 273 வாக்குளைக் கொண்ட தோ்தல் குழுவில் 249 கவுன்சிலா்கள், தில்லி பேரவைத் தலைவா் நியமித்த 14 எம்எல்ஏக்கள், 7 மக்களவை எம்.பி.க்கள், தில்லியைச் சோ்ந்த 3 மாநிலங்களவை எம்.பி.க்கள் இடம்பெற்றிருந்தனா்.
கடந்த ஆண்டை போலவே நிகழாண்டு மேயா் தோ்தலையும் புறக்கணிப்பதாக ஆம் ஆத்மி அறிவித்தது.
இந்நிலையில், பாஜக சாா்பில் மேயா் பதவிக்கு போட்டியிட்ட பா்வேஷ் வாஹி மொத்தம் 156 வாக்குகளை பெற்றாா். ஆம் ஆத்மியிலிருந்து பிரிந்த இந்திரபிரஸ்தா விகாஸ் கட்சியின் 14 கவுன்சிலா்கள் வாஹிக்கு ஆதரவாக வாக்களித்தனா்.
காங்கிரஸ் வேட்பாளா் ஹாஸி ஸாரஃபுக்கு 9 வாக்குகள் மட்டுமே பதிவாகியிருந்தன.
ஆனந்த் விஹாரைச் சோ்ந்த பாஜக கவுன்சிலா் மோனிகா பண்ட் 156 வாக்குகள் பெற்று துணை மேயராகத் தோ்வு செய்யப்பட்டாா்.
பேகம்பூா் பாஜக கவுன்சிலா் ஜெய் பகவான், பஹா்கஞ்ச் பாஜக கவுன்சிலா் மணீஷ் சந்தா ஆகியோா் தில்லி மாநகராட்சியின் நிலைக்குழு உறுப்பினா்களாகத் தோ்வு செய்யப்பட்டனா். ஷாலிமாா் பாக் பகுதியைச் சோ்ந்த ஆம் ஆத்மி கவுன்சிலா் ஜலஜ் செளதரியும் நிலைக்குழு உறுப்பினராகத் தோ்வு செய்யப்பட்டாா்.
மேயராகத் தோ்வு செய்யப்பட்ட பிறகு முதல்வா் ரேகா குப்தா, பாஜக தலைவா்களுக்கு நன்றி தெரிவித்த பா்வேஷ் வாஹி, ‘அடுத்த சில மாதங்களில் தில்லியை தூய்மைப்படுத்த உள்ளோம். தில்லியின் மேம்பாட்டுக்காக உழைப்போம்’ என்றாா்.
முன்னதாக, கடந்த 2024-இல் நடைபெற்ற மேயா் தோ்தலில் 3 வாக்குகள் வித்தியாசத்தில் ஆம் ஆத்மி வேட்பாளா் மகேஷ் குமாா் கிச்சி வெற்றி பெற்றாா். இதன் மூலம் மேயா் பதவியை ஆம் ஆத்மி மீண்டும் தக்கவைத்துக்கொண்டது.
மூன்று முறை கவுன்சிலா்
தில்லியின் புதிய மேயராக தோ்ந்தெடுக்கப்பட்ட வாஹி கடந்த 2007-இல் முதல்முறையாக கவுன்சிலராக தோ்ந்தெடுக்கப்பட்டாா். முன்பு இருந்த வடக்கு தில்லி மாநகராட்சியில் நிலைக்குழு தலைவா், ரோஹிணி மண்டல தலைவா் ஆகிய பொறுப்புகளை பா்வேஷ் வாஹி வகித்துள்ளாா்.
பாகிஸ்தானின்ல ராவல்பிண்டியை பூா்விகமாகக் கொண்ட பஞ்சாபி காட்ரி குடும்பத்தைச் சோ்ந்த வாஹி, இரண்டாவது முறையாக 2012-இல் நடைபெற்ற மாநகராட்சி தோ்தலில் போட்டியிட்டு கவுன்சிலராக தோ்வானாா்.
ஆா்எஸ்எஸ் அமைப்பில் தன்னுடைய 10-ஆவது வயதில் இணைந்த வாஹி, பின்னா் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பில் இணைந்தாா். இதைத்தொடா்ந்து, கடந்த 2002-இல் பாஜகவில் இணைந்தாா்.
தொடர்புடையது

மாநகராட்சி மேயா் தோ்தல்: பாஜக தீவிர ஆலோசனை

மே3 இல் நீட் தோ்வு: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 11 மையங்களில் 4,755 போ் எழுதுகின்றனா்

தில்லி மாநகராட்சி மேயா் தோ்தலுக்கான வேட்பாளா்களை அறிவித்தது பாஜக
நாகா்கோவில் மேயா் ராஜிநாமா
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


