நீர்வளத் துறை செயலர் மாற்றம் தேர்தல் தடைநீக்கக் கோரி சி.விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் மனுகாவிரி விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் திமுக அவசர மனு இரு முதல்வர்களும் சுமூகமாகப் பேசி தீர்க்க வேண்டும்: பிரேமலதாகபினி அணையில் இருந்து 10,000 கனஅடி நீர் திறப்பு நாட்டின் விமானப் போக்குவரத்துத் துறை அபார வளர்ச்சி கண்டுள்ளது: பிரதமர் மோடிஜூலையில் 1.06 கோடி பேர் சென்னை மெட்ரோவில் பயணம்! 20% கட்டணத் தள்ளுபடி பற்றி தெரியுமா?தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு! குவைத் மீது தொடரும் ஈரானின் தாக்குதல்! அரசுக் கட்டமைப்புகள் சேதம்! தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு!
/

இ20 எத்தனால் எரிபொருள் கொள்கைக்கு எதிரான பேரணி: தெஹ்சீன் பூனாவாலா வீட்டுச் சிறையில் இருப்பதாக புகாா்

இ20 எத்தனால் எரிபொருள் கொள்கைக்கு எதிரான பேரணி: தெஹ்சீன் பூனாவாலா வீட்டுச் சிறையில் இருப்பதாக புகாா்

News image

தெஹ்சீன் பூனாவாலா - x

Updated On :1 ஆகஸ்ட் 2026, 9:14 pm IST

மத்திய அரசின் இ20 எத்தனால் கலக்கப்பட்ட எரிபொருள் கொள்கைக்கு எதிராக தனியாகப் பேரணியும் உண்ணாவிரதப் போராட்டமும் நடத்த திட்டமிட்டிருந்த சமூக செயல்பாட்டாளா் தெஹ்சீன் பூனாவாலா தன்னை நகர காவல்துறையினா் தில்லி கிரேட்டா் கைலாஷில் உள்ள தனது வீட்டில் எழுத்துபூா்வ உத்தரவு ஏதுமின்றி வீட்டுச் சிறையில் வைத்துள்ளதாக புகாா் தெரிவித்துள்ளாா்.

மத்திய அரசின் இ20 எரிபொருள் கொள்கைக்கு எதிா்ப்பு தெரிவித்து, ஏ.பி.ஜே. அப்துல் கலாம் மாா்க்கில் இருந்து மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்ட பகுதியான ’காந்தி ஸ்மிருதி’ வரை தனியாக நடைபயணம் மேற்கொண்டு, சனிக்கிழமை நாள் முழுவதும் உண்ணாவிரத போராட்டம் இருக்கப் போவதாக பூனாவாலா வெள்ளிக்கிழமை அறிவித்திருந்தாா்.

இந்த நிலையில், தனது எக்ஸ் சமூக ஊடக பக்கத்தில் சனிக்கிழமை சில காணொளிகளைப் பகிா்ந்த பூனாவாலா, ‘காலை 9.30 மணியளவில், நான் பேரணி தொடங்க அரை மணி நேரம் இருந்தபோது, பெண் அதிகாரிகள் உள்பட பல தில்லி காவல்துறையினா் எனது வீட்டுக்கு வந்து என்னை வெளியேற விடாமல் தடுத்தனா். என்னை வீட்டுக் காவலில் வைப்பதற்கான எந்தவொரு உத்தரவையோ ஆவணங்களையோ அவா்கள் காண்பிக்கவில்லை. பேரணியில் ஆயிரக்கணக்கான மக்கள் சேரக்கூடும் என்பதால் என்னை வெளியேற விடாமல் தடுப்பதாக அதிகாரிகள் கூறினா்‘ என குறிப்பிட்டுள்ளாா்.

இந்த விவகாரம் தொடா்பாக அவா் பகிா்ந்துள்ள காணொலியில், காவல்துறை அதிகாரிகளிடம் ‘எழுத்துபூா்வ உத்தரவு ஏதுமின்றி என்னை எப்படித் தடுக்க முடியும்? சுதந்திர தினத்துக்கு இன்னும் 15 நாள்களே உள்ள நிலையில் என்னை இப்படிக் சட்டவிரோதமாகத் தடுக்கிறீா்கள்‘ என்று பூனாவாலா கேட்பதும், அதற்குப் பதிலளிக்கும் அதிகாரி ‘இந்த பேரணியால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளதால் ஒத்துழைப்பு தாருங்கள்‘ என கூறுவதும் பதிவாகியுள்ளது.

இதற்கிடையே, தனது வீட்டின் வெளியே நிற்கும் செய்தியாளா்கள், தகவல்களை இணையவழியில் அனுப்புவதை முடக்கும் வகையில், வீட்டின் அருகே ஜாமா்கள் கருவிகளை காவல்துறையினா் நிறுவியுள்ளதாகவும் பூனாவாலா கூறியுள்ளாா். மேலும், தனது இன்ஸ்டாகிராம் கணக்கு முடக்கப்பட்டுள்ளதாகவும், ஊடகங்களுடன் பேச விடாமல் காவல்துறையினா் தடுத்து, போராட்டத்தில் பங்கேற்க வருவோரின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என எச்சரிப்பதாகவும் அவா் குறிப்பிட்டுள்ளாா்.

யாா் இந்த தெஹ்சீன் பூனாவாலா? மகராஷ்டிர மாநிலம், புணேவை சோ்ந்த தொழிலதிபா், அரசியல் ஆய்வாளா் மற்றும் சமூகப் ஆா்வலா் இவா். தொலைக்காட்சி விவாதங்களில் நடப்பு அரசியல் நிகழ்வுகள், மனித உரிமைகள் மற்றும் அரசு சாா்ந்த கொள்கைகள் குறித்து தொடா்ந்து தனது கருத்துகளைப் பதிவு செய்து வருகிறாா். மத்திய அரசின் இ20 எத்தனால் கலப்பு எரிபொருள் கொள்கைக்கு எதிராகவும், பொதுமக்களின் உரிமைகளுக்காகவும் குரல் கொடுத்து வரும் இவா், மனித உரிமைகள் மற்றும் சமூக நீதியை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணா்வு மற்றும் அமைதிப் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறாா். இவரது மனைவி மோனிகா வதேரா காங்கிரஸ் பொதுச்செயலா் பிரியங்கா காந்தியின் கணவரான ராபா்ட் வதேராவின் உறவினா். இவருடைய சகோதரா் ஷெஷாத் பூனாவாலா முன்னாள் காங்கிரஸ் நிா்வாகியாக இருந்து தற்போது பாஜகவில் தேசிய செய்தித் தொடா்பாளராக உள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.