எத்தனால் கலந்த எரிபொருள் என்பது எரிபொருள் பற்றியதே இல்லை, உங்களைப் பற்றியது என்று மிகவும் நகைச்சுவையாக பதிலளித்திருந்தார் மத்திய சாலை மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி.
நாடு முழுவதும் இ20 எனப்படும் எத்தனால் கலந்த எரிபொருள் விற்பனைக்கு வரும் நிலையில் அது பற்றிய காரசார விவாதங்கள் நடந்துகொண்டே இருக்கிறது.
எத்தனால் கலந்த பெட்ரோலைப் பயன்படுத்துவதால் வாகனங்கள் பழுதாகுமா? மைலேஜ் கொடுக்குமா என்பது பற்றிய காரசார விவாதங்களும் அழுத்தமும் நாடு முழுவதும் ஏற்பட்டிருக்கும் நிலையில், கார் உரிமையாளர்கள் பக்கமே கேள்வியை திசை திருப்பியிருக்கிறார் நிதின் கட்கரி.
செய்தியாளர் ஒருவர், தன்னுடைய காரில் எத்தனால் கலந்த பெட்ரோல் பயன்படுத்திய பிறகு மைலேஜ் வெகுவாகக் குறைந்துவிட்டதாகக் குற்றம்சாட்டினார். அதாவது தன்னுடைய வாகனம் 2023 மாடல். இ20 பெட்ரோல் பயன்படுத்தத் தொடங்கும் முன் ஒரு லிட்டருக்கு 11 கி.மீ. வாகனத்தை இயக்கி வந்தேன், இப்போது 7 கிலோ மீட்டர்தான் இயக்க முடிகிறது என்றார்.
எத்தனால் கலந்த பெட்ரோல் மைலேஜ் கொடுப்பது குறைந்திருப்பது பற்றிய கேள்விக்கு பதிலளித்த நிதின் கட்கரி, எவ்வாறு இதனை நீங்கள் கணக்கிட்டீர்கள் என்றார்?
அதற்கு செய்தியாளரோ, வாகனம் ஓட்டும் அனைவரும் எவ்வாறு மைலேஜ் கணக்கிடுவார்களோ அப்படித்தான் என்று கூறினார்.
இதற்கு பதிலளித்த கட்கரி, ஒரு சராசரி கார் உரிமையாளரால் தங்கள் வாகனத்தின் எரிபொருள் சிக்கனத் திறனைத் தாங்களாகவே துல்லியமாகக் கணக்கிட முடியாது. அவர்களது வாகன உற்பத்தியாளர்களின் அளவீட்டுக் கருவி மூலமாகத்தான் கணக்கிட முடியும் என்றார்.
ஆனால், இ20 பெட்ரோல் சில வாகனங்களில் எரிபொருள் சிக்கனத்தை 3 முதல் 5 சதவீதம் வரை குறைக்கக்கூடும் என்பதை மத்திய அரசு ஒப்புக்கொண்டு, அதே வேளையில் அக்கொள்கையை நியாயப்படுத்திய சில நாள்களுக்குப் பிறகு மத்திய அமைச்சரே இவ்வாறு கூறியிருப்பது பேசுபொருளாகியிருக்கிறது.
Summary
What mileage does E20 petrol offer? Nitin Gadkari's response sparks discussion.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இ20 எரிபொருள்: 29 வாகனத் தயாரிப்பு நிறுவனங்களுக்கு கேஜரிவால் கடிதம்
எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால்

எத்தனால் கலப்பினால் பெட்ரோல் டேங்குகளை மொய்க்கும் எறும்புகள்! உண்மை என்ன?
இந்தியாவில் 100 % எத்தனால் எரிபொருள்: மத்திய அமைச்சா் கட்கரி ஒப்புதல்!
விடியோக்கள்

வியத்நாம் படகு விபத்தில் தப்பித்தது எப்படி? உயிர்தப்பிய நிர்மல் குமார் பேட்டி | Vietnam boat tragedy

மணமாலை வரம் தரும் முருகன் | Kalyana Kandha swamy Kovil | Madipakkam | கல்யாண கந்தசுவாமி கோயில்| கோயில் வலம் -3

தவெகவில் இணைய என்னை யாரும் அழைக்கவில்லை! - எம்.ஆர். விஜயபாஸ்கர் விளக்கம் | TVK | ADMK




