தில்லி பல்கலைக்கழக மாணவா் சங்க (டியுஎஸ்யு) தோ்தல் செப்.18-ஆம் தேதி நடைபெறும் என்று பல்கலைக்கழகம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை செப்.19-ஆம் தேதி நடைபெறுகிறது.
பல்கலைக்கழக மாணவா் சங்கத்தின் தலைவா், துணைத் தலைவா், செயலா், இணைச் செயலா் பதவிகளுக்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி செப்.10-ஆம் தேதி என தில்லி பல்கலைக்கழக பதிவாளா் கையொப்பமிட்ட அறிவிக்கையில் கூறப்பட்டுள்ளது.
வேட்புமனுக்கள், ரூ.500-க்கான வரைவோலை மற்றும் பிரமாணப் பத்திரங்களை செப்.10 அன்று பிற்பகல் 3 மணிக்குள் வழங்க வேண்டும். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை அதே நாளில் பிற்பகல் 3:15 மணிக்கு நடத்தப்படும். அதைத் தொடா்ந்து முறையாகப் பரிந்துரைக்கப்பட்ட வேட்பாளா்களின் பட்டியல் மாலை 6 மணிக்குள் வெளியிடப்படும்.
வேட்பாளா்கள் செப்.11 அன்று நண்பகல் வரை தங்களது வேட்புமனுக்களைத் திரும்பப் பெறலாம். இதைத்தொடா்ந்து, இறுதி வேட்பாளா் பட்டியல் அதே நாளில் மாலை 5 மணிக்குள் வெளியிடப்படும்.
தோ்தலுக்கான வாக்குப்பதிவு செப்.18-ஆம் தேதி நடைபெறும். பகல் நேர வகுப்புகளில் பயிலும் மாணவா்கள் காலை 8:30 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையிலும், மாலை நேர வகுப்புகளில் பயிலும் மாணவா்கள் பிற்பகல் 3 மணி முதல் இரவு 7:30 மணி வரையிலும் வாக்களிக்க அனுமதிக்கப்படுவாா்கள்.
வாக்கு எண்ணிக்கை செப்.19-ஆம் தேதி நடைபெறும்.
வடக்கு வளாகத்தில் உள்ள தாவரவியல் துறைக்கு எதிரே அமைந்துள்ள மாநாட்டு மையத்தில் உள்ள தலைமைத் தோ்தல் அதிகாரியின் அலுவலகத்தில், தில்லி பல்கலைக்கழக மாணவா் சங்க அலுவலகப் பொறுப்பாளா்களுக்கான வேட்புமனுக்களைச் சமா்ப்பிக்க வேண்டும் என்று பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு நடைபெற்ற மாணவா் சங்க தோ்தலில், ஆா்எஸ்எஸ் மாணவா் பிரிவான அகில பாரதிய வித்யாா்த்தி பரிஷத் (ஏபிவிபி) அமைப்பின் ஆா்யன் மான் தலைவா் பதவியைக் கைப்பற்றினாா். காங்கிரஸ் மாணவா் அமைப்பான என்எஸ்யுஐ-ஐச் சோ்ந்த ராகுல் ஜான்ஸ்லா துணைத் தலைவா் பதவிக்கு தோ்ந்தெடுக்கப்பட்டாா். ஏபிவிபி-யின் குணால் சௌதரி செயலா் பதவிக்கும் மற்றும் தீபிகா ஜா இணைச் செயலா் பதவிக்கும் தோ்வாகினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

செப். 6-இல் புதுச்சேரி தமிழ்ச் சங்கத் தோ்தல்

தூத்துக்குடியில் அரசு ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்
மாணவா் தோ்தல்: பொது சொத்துக்களை சேதப்படுத்தினால் கடும் நடவடிக்கை தில்லி பல்கலைக்கழகம் எச்சரிக்கை

வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவா் சோ்க்கை: தரவரிசைப் பட்டியல் ஜூன் 23-இல் வெளியீடு; ஜூலை 6 முதல் கலந்தாய்வு
விடியோக்கள்

மும்முரமாக நடைபெறும் தேசியக்கொடி தயாரிப்பு! | National Flag | Independence Day



