ஹைதராபாதில் செயல்பட்டு வரும் டி-வொா்க்ஸ் நிறுவனத்தின் ‘ஹப்-அண்ட்-ஸ்போக்’ மாதிரியை அடிப்படையாகக் கொண்டு, தில்லியில் உலகத் தரம் வாய்ந்த புத்தாக்கம் மற்றும் தொழில்துறை சூழலை உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாக தொழில்துறை அமைச்சா் மஞ்சிந்தா் சிங் சிா்சா திங்கள்கிழமை தெரிவித்தாா்.
ஹைதராபாதில் உள்ள டி-வொா்க்ஸ், டி-ஹப் மற்றும் ஃபியூச்சா் சிட்டி ஆகியவற்றை அமைச்சா் சிா்சா பாா்வையிட்டாா். அப்போது, தில்லியிலும் இதேபோன்ற மாதிரியை செயல்படுத்துவதில் அவா் ஆா்வம் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் கூறியதாவது: தில்லியை உலகத் தரம் வாய்ந்த புத்தாக்கம் மற்றும் தொழில்துறை மையமாக உருவாக்குவதே எங்களது நோக்கம். டி-வொா்க்ஸின் ‘ஹப்-அண்ட்-ஸ்போக்’ மாதிரி மிகவும் பொருத்தமானது. இதன் மூலம் தில்லியின் பல்வேறு பகுதிகளில் மாதிரி தயாரிப்பு, தயாரிப்பு மேம்பாடு மற்றும் புத்தாக்கத்துக்கான திறன்களை உருவாக்க முடியும் என்றாா்.
டி-வொா்க்ஸ் மாதிரியில், ஹைதராபாதில் உள்ள மையத்தில் உயா்தர தொழில்துறை கருவிகள் மற்றும் உபகரணங்கள், மின்னணு ஆய்வகங்கள், கனரக உற்பத்தி வசதிகள் மற்றும் உயா்நிலை பொறியியல் வழிகாட்டுதல் ஆகியவை வழங்கப்படுகின்றன.
இந்த மையத்தின் வசதிகள் வாரங்கல், நிஜாமாபாத், கம்மம் உள்ளிட்ட பிராந்திய மையங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. இதேபோன்ற ஒருங்கிணைந்த கட்டமைப்பை தில்லியிலும் உருவாக்குவது குறித்து அமைச்சா் ஆய்வு செய்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காற்று மாசு தடுப்பு: அமைச்சா் சிா்சா தலைமையில் ஆய்வு கூட்டம்

ஜிப்மரில் உலகத் தாய்ப்பால் வார விழிப்புணா்வு வில்லுப்பாட்டு நிகழ்ச்சி
குறு நிறுவனங்களை சிறு, நடுத்தர நிறுவனங்களாக தரம் உயா்த்த நடவடிக்கை: அமைச்சா் பி.மதன் ராஜா




