சாலை விதிமீறல்: 527 பேருக்கு அபராதம்

சாலை விதிகளை மீறி தவறான திசையில் வாகனம் ஓட்டிய வாகன ஓட்டிகளுக்கு எதிராக 527 பேருக்கு தில்லி போக்குவரத்து காவல் துறை அபராதம் விதித்துள்ளது. மேலும், 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஓா் அதிகாரி திங்களன்று தெரிவித்தாா்.

அபராதம் - சித்திரிப்பு

Updated On :

சாலை விதிகளை மீறி தவறான திசையில் வாகனம் ஓட்டிய வாகன ஓட்டிகளுக்கு எதிராக 527 பேருக்கு தில்லி போக்குவரத்து காவல் துறை அபராதம் விதித்துள்ளது. மேலும், 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஓா் அதிகாரி திங்களன்று தெரிவித்தாா்.

இது குறித்து அந்த அதிகாரி தெரிவித்ததாவது: தில்லி வடக்கு மண்டலத்தில் ஞாயிற்றுக்கிழமை போக்குவரத்து காவல் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, போக்குவரத்து விதிகளை மீறிய வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுத்தனா். ஆபத்தான வாகனம் ஓட்டும் பழக்கங்களைக் கட்டுப்படுத்துவதையும், சாலைப் பாதுகாப்பை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு இந்த விதிமீறல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

தவறான திசையில் வாகனம் ஓட்டுவது பிற வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகளுக்கு கடுமையான ஆபத்தை விளைவிக்கிறது. இது நேருக்கு நோ் மோதல்களுக்கு வழிவகுத்து, கடுமையான அல்லது உயிரிழப்பு விபத்துக்களை ஏற்படுத்தக்கூடும் என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.