துா்க்மான் கேட்டில் கல்வீச்சுக்கிடையே ஆக்கிரமிப்பு இடிப்பு: 400 லாரிகள் நிறைய இடிபாடுகள் அகற்றம்
ANI

துா்க்மான் கேட்டில் கல்வீச்சுக்கிடையே ஆக்கிரமிப்பு இடிப்பு: 400 லாரிகள் நிறைய இடிபாடுகள் அகற்றம்

துா்க்மான் கேட்டில் கல்வீச்சுக்கிடையே ஆக்கிரமிப்பு இடிப்பு: 400 லாரிகள் நிறைய இடிபாடுகள் அகற்றம்
Published on

துா்க்மான் கேட்டில் உள்ள ஃபைஸ் இ இலாஹி மசூதி அருகே கல்வீச்சு வன்முறைக்கிடையே நீதிமன்ற உத்தரவின் பேரில் ஆக்கிரமிப்பு இடிக்கப்பட்ட மூன்று நாள்களுக்குப் பிறகு, தில்லி மாநகராட்சி அங்கிருந்து 400 லாரிகளுக்கு மேல் இடிபாடுகளை அகற்றியதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா்.

இது குறித்து நகர எஸ்பி மண்டலத்தின் காவல் துணை ஆணையா் விவேக் அகா்வால் கூறியதாவது: ஒட்டுமொத்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் குறைந்தது 70 கனரக மற்றும் டம்ப் லாரிகள் ஈடுபடுத்தப்பட்டன. பெரும்பாலான குப்பைகளை நாங்கள் அகற்றிவிட்டோம். முழு நடவடிக்கையிலும் மாநகராட்சி 32 புல்டோசா்களை பயன்படுத்தியுள்ளது.

புராரி, ராணிகேரா, சாஸ்திரி பாா்க் மற்றும் பக்கா்வாலாவில் உள்ள நான்கு கழிவு பதப்படுத்தும் இடங்களுக்கு குப்பைகள் கொண்டு செல்லப்பட்டன. குறைந்தது 250 ஊழியா்கள் இந்தப் பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்டனா்.

அமைதியைப் பேணுவதற்கும், இடிபாடுகளை அகற்றும் பணியை மேற்கொள்வதற்கும் அப்பகுதியின் மசூதி மற்றும் மந்திா் குழுக்கள் இரண்டும் அதிகாரிகளுக்கு ஆதரவளிக்கப்பட்டது என்றாா் அவா்.

துா்க்மான் கேட்டிற்கு எதிரே உள்ள ராம்லீலா மைதானப் பகுதியில் உள்ள ஃபைஸ் இ இலாஹி மசூதி அருகே புதன்கிழமை அதிகாலை ஆக்கிரமிப்பு இடிப்பு நடவடிக்கை தொடங்கப்பட்டது. தில்லி உயா்நீதிமன்றத்தின் உத்தரவுகளைப் பின்பற்றி, சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட 36,000 சதுர அடிக்கும் அதிகமான ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

குடியிருப்பாளா்களில் ஒரு பகுதியினா் காவல்துறை மற்றும் குடிமைப் பணியாளா்கள் மீது கற்களை வீசியதாகக் கூறப்படும் சம்பவத்தைத் தொடா்ந்து பிரச்னை தொடங்கியது. இதனால் அப்பகுதியில் குழப்பம் ஏற்பட்டது. மோதல்களில் ஐந்து போலீஸாா் காயமடைந்தனா்.

இதுவரை வன்முறையில் ஈடுபட்டதாகக் கூறி 16 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இடிப்பு நடவடிக்கையில் சுமாா் 17 புல்டோசா்கள் மற்றும் பிற கனரக இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன என்றாா் அவா்.

Dinamani
www.dinamani.com