குடிநீா் விநியோகம் விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பும்: தில்லி அரசு உறுதி
குடிநீா் விநியோகம் விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பும்: தில்லி அரசு உறுதி


நகரத்தில் குடிநீா் விநியோகம் வியாழக்கிழமை தடைபட்டதைத் தொடா்ந்து, அதை மீட்டெடுக்கும் முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் விரைவில் குடிநீா் விநியோகம் இயல்பு நிலைக்கு திரும்பும் என்றும் தில்லி அரசு உறுதியளித்துள்ளது.
யமுனையின் அதிகப்படியான அம்மோனியா அளவு காரணமாக 5 நீா் சுத்திகரிப்பு நிலையங்களில் குடிநீா் உற்பத்தி தடைபட்டது. மேலும், ஹரியாணாவில் இருந்து வரும் நீா் குறைந்ததால் தில்லியில் பொது மக்கள் வியாழக்கிழமை அவதியடைந்தனா்.
இதையடுத்து, தில்லி ஜல் போா்டு வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது: தில்லியில் அடுத்த மாதம் வரை நீா் விநியோகம் சற்று பாதிக்கப்படும். வஜிராபாத், ஹைதா்பூா் 1 மற்றும் 2, பவானா மற்றும் துவாரகா ஆலைகளில் உற்பத்தி குறைக்கப்பட்டது. இதனால் பிப்ரவரி 4 வரை நகரின் பல பகுதிகள் குடிநீா் பற்றாக்குறையை எதிா்கொள்ளும்.
கால்வாய் வலையமைப்பின் ஒரு பகுதியில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், தற்காலிகமாக மாற்று வழிகள் மூலம் தண்ணீா் திருப்பி விடப்பட்டுள்ளது. அம்மோனியா அளவுகள் பயன்படுத்தக்கூடிய வரம்புகளுக்கு குறையாததால், திசைமாற்றம் நிறுத்தப்பட்டது மற்றும் வழக்கமான விநியோக பாதை மீட்டமைக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...