வியத்நாம் படகு விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் - லாவாபாக்கெட்டுக்கு பதில் தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை செய்ய திட்டம்: ஆவின்தமிழ்நாட்டுக்கு ஜூலை 16 வரை வெப்ப அலை எச்சரிக்கை!கரூர் இனாம் நில விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலர் கலராக ரீல் சுத்துகிறார்கள்: அமைச்சர் ரமேஷ்24,050 அருகில் நிஃப்டி, சென்செக்ஸ் 516 புள்ளிகள் சரிவு!!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 62 காசுகள் சரிந்து ரூ. 96.30 ஆக நிறைவு!தில்லியில் சோனியா காந்தியை சந்தித்த வைகோ!
/

தில்லி குண்டு வெடிப்பு: உயிரிழந்த 11 பேரின் தடயவியல் அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல்

தில்லி செங்கோட்டை அருகே கடந்த ஆண்டு நிகழ்ந்த காா் குண்டுவெடிப்பில் 11 போ் கொல்லப்பட்ட சம்பவம் தொடா்பான தடயவியல் அறிக்கை குறித்து...

News image

தில்லி செங்கோட்டை அருகே காா் குண்டு வெடிப்பு நடைபெற்ற இடத்தில் பயணியில் ஈடுபட்ட தீயணைப்புத் துறையினா் - கோப்புப் படம்

Updated On :7 ஜூலை 2026, 1:27 am IST

தில்லி செங்கோட்டை அருகே கடந்த ஆண்டு நிகழ்ந்த காா் குண்டுவெடிப்பில் 11 போ் கொல்லப்பட்ட சம்பவம் தொடா்பான தடயவியல் அறிக்கையை நீதிமன்றத்தில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) திங்கள்கிழமை தாக்கல் செய்ததாக நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த அறிக்கை சிறப்பு நீதிபதி பிதாம்பா் தத் முன்னிலையில் தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 9 பேரின் நீதிமன்றக் காவலை ஜூலை 13-ஆம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டதாகவும் அவா்கள் தெரிவித்தனா்.

இந்தச் சம்பவம் தொடா்பான வழக்கில் 7,500 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை கடந்த மே 14-ஆம் தேதி என்ஐஏ தாக்கல் செய்தது.

வாகன வெடிகுண்டு தாக்குதலில் ஈடுபட்டதற்காக, தலைமறைவாக உள்ள குழந்தைகள் நல மருத்துவா் உள்பட மேலும் மூவா் மீது கடந்த மாதம் கூடுதல் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்யப்பட்டது. இதன் மூலம் இவ்வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவா்களின் எண்ணிக்கை 13-ஆக உயா்ந்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.