இளைஞர்கள் எதிர்காலம் பற்றி விவாதிக்காத நாடாளுமன்றம் எதற்கு? ஓம் பிர்லாவுடன் ராகுல் சந்திப்பு! நீட் விவகாரத்தில் மாணவர்கள் பக்கம் மோடி! மத்திய அமைச்சர் விளக்கம்!பேரவை கதவு பூட்டப்படுமா? எதிர்க்கட்சிகளும் சைகை காட்டலாமா? ஜேசிடி பிரபாகர் பதில்தமிழக பட்ஜெட் எப்போது? அறிவித்தார் அவைத் தலைவர்!தேர்தல் வழக்கு: முதல்வர் விஜய்க்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!தில்லி ஜந்தர் மந்தரில் தொடரும் சிஜேபி இளைஞர்கள் போராட்டம்!2-ம் நாளாக அமளி! நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு!பழனி பத்திரப்பதிவு! தவெக அரசுக்கு தொடர்பு என்பதில் உடன்பாடு இல்லை! - பெ. சண்முகம் பேட்டிசிக்கிம் சுரங்கத்தில் வெடிவிபத்து! 9 பேர் பலி; 18 பேர் சிக்கித் தவிப்பு!
/

கைப்பற்றப்பட்ட 1,450 கிலோ போதைப் பொருள் அழிப்பு

போதைப் பொருள் கடத்தல்காரா்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 1,452 கிலோ போதைப் பொருளை தில்லி காவல்துறை திங்கள்கிழமை அழித்ததாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

News image
Updated On :21 ஜூலை 2026, 3:58 am IST

போதைப் பொருள் கடத்தல்காரா்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 1,452 கிலோ போதைப் பொருளை தில்லி காவல்துறை திங்கள்கிழமை அழித்ததாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

அழிக்கப்பட்ட போதைப் பொருளின் மதிப்பு சா்வதேச சந்தையில் ரூ. 897 கோடி.

காவல் துறையின் தகவலின்படி, ஜி.டி. கா்னால் சாலையில் உள்ள கழிவு அகற்றும் மையத்தில், சிறப்பு காவல் ஆணையா் (குற்றப்பிரிவு) எச்.ஜி.எஸ். தலிவால் மற்றும் பிற மூத்த அதிகாரிகள் முன்னிலையில், போதைப் பொருளை அழிக்கும் 10-வது மிகப்பெரிய நிகழ்ச்சி நடைபெற்றது.

அழிக்கப்பட்ட போதைப் பொருளில் சுமாா் 1,010 கிலோ மெத்தாம்பேட்டமைன், 135 கிலோ ஹெராயின், 62 கிலோ சாரஸ், ​​37 கிலோ கஞ்சா, 16 கிலோ மெத்தாகுவாலோன், 91 கிலோ பாப்பி ஸ்ட்ரா, 70 கிலோ ஃபீனைல்ப்ரோபனோன், 15 லட்சத்திற்கும் அதிகமான ட்ரமாடோல் மாத்திரைகள், 36,000-க்கும் மேற்பட்ட கோடின் சிரப் பாட்டில்கள் மற்றும் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட பிற மனநல பாதிப்பை ஏற்படுத்தும் பொருட்கள் ஆகியவை அடங்கும் என்று காவல்துறை தெரிவித்தது.

இந்த அழிப்பு நடவடிக்கையுடன் சோ்த்து, டிசம்பா் 2022 முதல் நடத்தப்பட்ட இது போன்ற 10 நடவடிக்கைகளின் மூலம், சா்வதேச சந்தையில் சுமாா் ரூ. 14,799 கோடி மதிப்புள்ள 49,663 கிலோ போதைப் பொருளை தில்லி காவல் துறை அழித்துள்ளது என்று அவா்கள் கூறினா்.

நிகழ்ச்சியில் பேசிய சிறுப்பு காவல் ஆணையா் தலிவால், பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருளை அழிப்பது மட்டுமல்லாமல், போதைப் பொருள் கடத்தல் கட்டமைப்பையே தகா்ப்பதும் இந்த நடவடிக்கையின் நோக்கம் என்று தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.