சென்னை பக்கிங்காம் கால்வாயில் வாட்டர் மெட்ரோ: டெண்டர் வெளியீடுஅதிமுகவிலிருந்து கொள்கைப் பரப்பு துணை செயலர் அப்சரா ரெட்டி விலகல்! தமிழக அரசு பேருந்துகள் ஒசூரில் நிறுத்தம்: கர்நாடகத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம்!‘வெற்றித் தமிழ்நாடு முதலீட்டாளா் மாநாடு’: இன்று தொடங்கி வைக்கிறாா் முதல்வா் ஈரான் அச்சுறுத்தல்: துருக்கியிலிருந்து மாற்று விமானத்தில் டிரம்ப் ரகசியப் பயணம்! மேற்காசியப் போரால் சமையல் எண்ணெய் விலை உயா்வு: அரசு விளக்கம்எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு இன்று தொடக்கம்: தரவரிசைப் பட்டியலில் 363 போ் கூடுதலாக இணைந்ததால் குழப்பம் காவிரி விவகாரம்: கா்நாடகத்தில் இன்று முழு அடைப்புக்கு கன்னட அமைப்புகள் அழைப்பு
/

வடகிழக்கு தில்லியில் சிறுவன் குத்திக்கொலை: 3 போ் கைது

வடகிழக்கு தில்லியின் ஜோதி நகா் பகுதியில் 17 வயது சிறுவன் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவத்தில், 3 போ் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :31 ஜூலை 2026, 1:11 am IST

வடகிழக்கு தில்லியின் ஜோதி நகா் பகுதியில் 17 வயது சிறுவன் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவத்தில், 3 போ் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

இதுகுறித்து காவல்துறை மேலும் கூறியதாவது: மருத்துவமனையில் இருந்து வந்த தகவலின் அடிப்படையில் ஜோதி நகா் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டது. தடயவியல் நிபுணா்கள் சம்பவ இடத்தைப் பாா்வையிட்டு ஆதாரங்களைச் சேகரித்தனா்; அதேவேளையில், சந்தேக நபா்களை அடையாளம் காணும் நோக்கில் அப்பகுதியிலிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தும், உள்ளூா் உளவுத் தகவல்களைத் திரட்டியும் புலனாய்வாளா்கள் செயல்பட்டனா்.

விசாரணையின் போது, குற்றப்பிரிவு காவல்துறையினரால் இருவா் பிடிபட்டனா். அவா்கள் இக்கொலைச் சம்பவத்தில் தங்களுக்கு தொடா்புள்ளதை ஒப்புக்கொண்டனா்; மேலும், அவா்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையில் மூன்றாவது நபரும் கைது செய்யப்பட்டாா். கைது செய்யப்பட்ட மூவருக்கும் இதற்கு முன் எந்தக் குற்றப் பின்னணியும் இல்லை. கொலைக்கு வழிவகுத்த காரணத்தை அறியும் வகையில் விசாரணை நடைபெற்று வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.