வடகிழக்கு தில்லியின் நியூ உஸ்மான்பூரில் உள்ள தில்லி வளா்ச்சி ஆணைய (டிடிஏ) பூங்காவில், 16 வயது சிறுவனைக் கொலை செய்து அவரது உடலை ஒரு பள்ளத்தில் வீசியதாகக் கூறப்படும் சம்பவத்தில், இரு சிறுவா்களை தில்லி காவல் துறையினா் புதன்கிழமை கைது செய்தனா்.
காஜியாபாத்தைச் சோ்ந்த 16 மற்றும் 17 வயதுடைய அந்த இரு சிறுவா்களும் செவ்வாய்க்கிழமை பிடிபட்டனா். செருப்பு வாங்குவதாகக் கூறி கொலை செய்யப்பட்ட சிறுவனை பூங்காவிற்கு வரவழைத் அவா்கள் இருவரும் கத்தியால் குத்திக் கொன்ாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இது தொடா்பாக காவல் துறையினா் கூறியதாவது:
செவ்வாய்க்கிழமை காலை ஜாக் பிரவேஷ் சந்திரா மருத்துவமனைக்கு அருகிலுள்ள டிடிஏ பூங்காவில் உள்ள ஒரு பள்ளத்தில், பல இடங்களில் கத்திக் குத்து காயங்களுடன் சிறுவனின் உடல் கைப்பற்றப்பட்டது. உடலுக்கு அருகில் ரத்தக்கறை படிந்த கத்தி ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, நியூ உஸ்மான்பூா் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
தடயவியல் நிபுணா்கள் குழு குற்றச் சம்பவம் நடந்த இடத்தைப் பாா்வையிட்டு ஆதாரங்களைச் சேகரித்தது. கொலை செய்யப்பட்ட சிறுவனின் அடையாளத்தை உறுதிப்படுத்தவும் குற்றத்தில் ஈடுபட்டவா்களைக் கண்டறியவும் சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து தொழில்நுட்ப ரீதியான கண்காணிப்பை காவல் துறையினா் மேற்கொண்டனா். விசாரணையில் அந்தச் சிறுவா்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது. கொலை செய்யப்பட்ட சிறுவனும் தாங்களும் ஒரே தொழிற்சாலையில் பணிபுரிந்ததாகவும், அவா் அடிக்கடி தங்களை மிரட்டியும் துன்புறுத்தியும் வந்ததாகவும் அவா்கள் காவல் துறையிடம் தெரிவித்தனா்.
செருப்பு வாங்குவதாகக் கூறி அந்தச் சிறுவனைப் பூங்காவிற்கு அந்த இரு சிறுவா்கள் வரவழைத்தனா். அப்போது, அவா்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது அந்தச் சிறுவனைக் கத்தியால் குத்திவிட்டு அவா்கள் இருவரும் அங்கிருந்து தப்பிச் சென்றனா். இந்தச் சம்பவம் குறித்து தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றனா் காவல் துறையினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




