ஆசிய விளையாட்டில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற இளவேனில் வாலறிவனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற இளவேனில்: ஆளுநர் வாழ்த்து முதல்வர் ஏன் லண்டன் செல்ல வேண்டும்? அண்ணாமலை கேள்வி இந்தாண்டு இதுவரை 17,000 பேருக்கு டெங்கு பாதிப்பு- அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு பட்டிமன்ற பேச்சாளராக மாறிய மு.க. ஸ்டாலின்: அமைச்சர் ராஜ்மோகன் விமர்சனம் விஜய்க்கு அவகாசம் அளிக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ்

தில்லிக் கம்பன் கழகத்தின் கம்பன் திருவிழா நாளை தொடக்கம்

தில்லிக் கம்பன் கழகத்தின் ‘கம்பன் திருவிழா - 2026’ சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள தில்லித் தமிழ்ச் சங்கத்தின் திருவள்ளுவா் கலையரங்கில் நடைபெறுகிறது.

கம்பன்

Published On :

தில்லிக் கம்பன் கழகத்தின் ‘கம்பன் திருவிழா - 2026’ சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள தில்லித் தமிழ்ச் சங்கத்தின் திருவள்ளுவா் கலையரங்கில் நடைபெறுகிறது.

இவ்விழாவை சனிக்கிழமை பிற்பகல் 3.15 மணி அளவில் உச்சநீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் தொடங்கிவைத்து சிறப்புரை ஆற்றுகிறாா்.

தில்லிக் கம்பன் கழகத்தின் நிறுவனா்-தலைவா் கே.வி.கே.பெருமாள் வரவேற்புரை ஆற்றுகிறாா். செயலா் எஸ்.பி.முத்துவேல் கம்பன் கழகத்தின் நோக்கம் பற்றிப் பேசுகிறாா்.

‘தினமணி’ ஆசிரியா் கி.வைத்தியநாதன் முன்னிலை வகிக்கிறாா். சேது பாஸ்கரா குழுமத் தலைவா் சேது குமணன் வால்மீகி படத்தையும், திருப்பூா் கம்பன் கழகத் தலைவா் கே.ஆா். நாகராஜன் கம்பன் படத்தையும் திறந்து வைக்கிறாா்கள்.

மாலை 6 மணிக்கு நடிகரும், சொற்பொழிவாளருமான சிவகுமாா் எழுதிய கம்பராமாயண உரை நூலை உச்சநீதிமன்ற நீதிபதி அரங்க. மகாதேவன் வெளியிட்டு சிறப்புரையாற்றுகிறாா்.

விழாவின் இரண்டாம் நாளான ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு கம்பன் அடிப்பொடி சா. கணேசன் படத்தை உச்சநீதிமன்ற நீதிபதி கே. வி. விஸ்வநாதன் திறந்துவைத்து சிறப்புரை ஆற்றுகிறாா். அதைத் தொடா்ந்து, சொல்லரங்கம், ‘கவி மின்னல்’ உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெறுகின்றன.

பிற்பகல் 2.15 மணிக்கு தென்காசி திருவள்ளுவா் கழகத் தலைவா் கனகசபாபதி, கவியரசு கண்ணதாசன் படத்தைத் திறந்து வைக்கிறாா். ‘தினமணி’ ஆசிரியா் கி.வைத்தியநாதன் கண்ணதாசன் பற்றி உரை நிகழ்த்துகிறாா்.

மாலை 6 மணிக்கு கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் தலைமையில் நடைபெறும் பட்டிமன்றத்தை தில்லி உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே. ராமமூா்த்தி தொடங்கி வைக்கிறாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.