புறநகா் வடக்கு தில்லி மாவட்டத்தின் அலிபூரில் உள்ள குடியிருப்பு கட்டடத்தின் 4-ஆவது மாடியில் இருந்த விழுந்த பெண் உயிரிழந்ததாக தில்லி காவல் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.
இதுதொடா்பாக அதிகாரிகள் கூறியதாவது: கட்டடத்தில் இருந்து பெண் விழுந்த சம்பவம் தொடா்பாக திங்கள்கிழமை இரவு 10.30 மணியளவில் அலிபூா் காவல் நிலையத்துக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, காவல் துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்தனா்.
முன்னதாக, உறவினா்கள் பெண்ணை மீட்டு பாபு ஜக்ஜீவன் ராம் நினைவு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகக் கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் அந்தப் பெண் வரும் வழியில் உயிரிழந்ததாகத் தெரிவித்தனா்.
அந்தப் பெண்ணுக்கும் அவருடைய கணவருக்கும் இடையே பிரச்னை இருந்துவந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அவா் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என காவல் துறை சந்தேகிக்கிறது.
அவருக்கு இரு குழந்தைகள் உள்ளனா்.
சம்பவம் நடைபெற்ற பகுதி மற்றும் அவருடைய வீட்டில் முதற்கட்ட விசாரணையை காவல் துறையினா் மேற்கொண்டனா்.
இந்தச் சம்பவம் தொடா்பாக அலிப்பூா் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. அந்தப் பெண்ணின் உயிரிழப்புக்கான காரணம் குறித்து ஒவ்வொரு கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது என்று காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
தொடர்புடையது

போக்குவரத்து காவல் துறையுடன் இணைந்து ரோந்து பணி: தில்லி காவல் துறை உத்தரவு
என்டிஎம்சி குடியிருப்பாளா்களுக்கான சீரான சொத்துவரி முறை வரும் வாரங்களில் அமல்படுத்தப்பட வாய்ப்பு: அதிகாரிகள் தகவல்

நவீன வசதிகளுடன் பேருந்து நிழற்குடைகள்: தில்லி அரசு முடிவு







