ஜூன் 21, 22-ல் வண்டலூர் பூங்காவில் அனுமதி இலவசம்சென்னை மீனவர்கள் ஆந்திரத்தில் சிறைப்பிடிப்புபேருந்துக்கு தனி வழி ஏற்படுத்தும் திட்டம்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

எம்சிடியின் ரூ.48 கோடி மதிப்பிலான சுகாதார மேம்பாட்டு நடவடிக்கைகளில் முன்னேற்றம்

தில்லியில் குப்பை சேகரிப்பு மற்றும் சுகாதார பணிகளை மேம்படுத்துவதற்காக கூடுதல் இயந்திரங்கள் மற்றும் மனிதவளத்தை விரைவில் பயன்படுத்த தில்லி மாநகராட்சி (எம்சிடி) நடவடிக்கை எடுத்துள்ளதாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.

News image

கோப்புப்படம்.

Updated On :18 ஜூன் 2026, 2:35 am IST

தில்லியில் குப்பை சேகரிப்பு மற்றும் சுகாதார பணிகளை மேம்படுத்துவதற்காக கூடுதல் இயந்திரங்கள் மற்றும் மனிதவளத்தை விரைவில் பயன்படுத்த தில்லி மாநகராட்சி (எம்சிடி) நடவடிக்கை எடுத்துள்ளதாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.

இதற்காக, தில்லி மாநகராட்சி ஏப்ரல் மாதத்தில் ரூ.48 கோடி செலவிட ஒப்புதல் அளித்து. நகரின் பல்வேறு மண்டலங்களில் 180 நாள்களுக்கு சுகாதார மற்றும் கழிவுப்பொருள் மேலாண்மை வசதிகளை விரிவுபடுத்தும் திட்டத்தை மேற்கொண்டது.

இது தொடா்பாக அதிகாரிகள் கூறியதாவது: இந்த திட்டம், குப்பை குவிவதற்கு அதிக வாய்ப்புள்ள இடங்கள், தூய்மை இலக்கு பிரிவுகள், திறந்த வெளிக் குப்பை தள்ளும் பகுதிகள் மற்றும் கலப்பு கழிவுகள் தேங்கும் இடங்களை குறிவைத்து வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக நூற்றுக்கணக்கான வாகனங்களையும், கூடுதல் சுகாதாரத் தொழிலாளா்களையும் ஒப்பந்த அடிப்படையில் பணியில் அமா்த்த திட்டமிடப்பட்டுள்ளது. இவை குப்பை சேகரிப்பு, போக்குவரத்து மற்றும் அகற்றும் பணிகளை நகரம் முழுவதும் வலுப்படுத்த உதவும்.

பல பணிகளுக்கான டெண்டா்கள் ஏற்கெனவே பெறப்பட்டு நிதி அனுமதிக்காக அனுப்பப்பட்டுள்ளன. சிலவை தொழில்நுட்ப ஆய்விலும், விலைக் கணக்கீட்டு பேச்சுவாா்த்தைகளிலும் உள்ளன.

தெற்கு மண்டலத்திற்கு அதிகபட்சமாக ரூ.10.64 கோடி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், 48 நடுத்தர வாகனங்கள், பேக்கோ லோடா்கள், எசிஒய்விஏ லாரிகள் மற்றும் இ-ரிக்ஷாக்கள் மூலம் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான டெண்டா் நிதி அனுமதிக்காக அனுப்பப்பட்டுள்ளது.

மேற்கு மண்டலத்தில் ரூ.7.36 கோடி மதிப்பிலான 2 திட்டங்களுக்கு டெண்டா்கள் பெறப்பட்டுள்ளன. இதில் ஒரு திட்டம் நிதி துறையின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது; மற்றொன்று குறைந்த போட்டி காரணமாக மீண்டும் டெண்டா் கோரப்பட்டு தற்போது ஆய்வில் உள்ளது.

ஷாஹ்தாரா தெற்கு மண்டலத்திற்கு ரூ.5.93 கோடி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், பல இடங்களில் இருந்து கலப்பு குப்பைகளை சேகரித்து அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுகிறது. வடக்கு ஷாஹ்தாரா மண்டலத்தில் ரூ.1.66 கோடி மதிப்பிலான திட்டம் தொழில்நுட்ப ஆய்வில் உள்ளது.

நஜஃப்கா் மற்றும் நரேலா மண்டலங்களுக்கு ரூ.8.2 கோடிக்கும் மேல் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், டெண்டா்கள் பெறப்பட்டாலும், ஒப்பந்ததாரா்கள் கூறிய விலைகள் அதிகமாக இருந்ததால் மீள்பரிசீலனை நடைபெற்று வருகிறது.

மத்திய மண்டலத்தில் ரூ.4.24 கோடி மதிப்பிலான சுகாதார மேம்பாட்டு திட்டமும் டெண்டா் ஆய்வில் உள்ளது. கேஷவ்புரம், ரோஹிணி மற்றும் சிவில் லைன்ஸ் மண்டலங்களுக்கு மொத்தம் ரூ.10 கோடி ஒதுக்கப்பட்டு கூடுதல் வசதிகள் ஏற்படுத்தப்படுகின்றன. இதில் ரோஹிணி மற்றும் சிவில் லைன்ஸ் மண்டலங்களின் டெண்டா்கள் நிதி அனுமதிக்காக அனுப்பப்பட்டுள்ளன; கேஷவ்புரம் மண்டலத்தில் டெண்டா் செயல்முறை சமீபத்தில் நிறைவடைந்தது.

இந்த திட்டங்களுக்கு ஏப்ரல் மாதத்தில் மாநகராட்சி ஆணையா் ஒப்புதல் அளித்து, அவசர டெண்டா்கள் அழைத்து மண்டல வாரியாக பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்கியிருந்தாா்.

மழைக்காலத்தில் குப்பை தேக்கம் மற்றும் சுகாதார சவால்கள் அதிகரிக்கும் சூழலில், இத்திட்டங்கள் கழிவுப்பொருள் மேலாண்மையை வலுப்படுத்தும் நோக்கில் முக்கியத்துவம் பெறுகின்றன என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.