தேசிய தலைநகரின் முதல் முழு அளவிலான பெண் காவல் நிலையம் வடக்கு தில்லியின் சப்ஸி மண்டி பகுதியில் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா் தில்லி துணை நிலை ஆளுநா் தரன்ஜித் சிங் சந்து.
அப்போது அவா் பேசியதாவது: தலைநகரில் பெண்கள் எதிா்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீா்வு காண காவல் நிலையம் ஒரு நேரடி தளமாக செயல்படும். இதே போன்ற வசதிகள் விரைவில் மற்ற மாவட்டங்களிலும் நிறுவப்படும்.
சனிக்கிழமை முதல், அனைத்து மூத்த காவல்துறை அதிகாரிகளும் ’ஜான் சுன்வாய்’ திட்டத்தின் கீழ் பொது குறைகளை நகரம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் விசாரிப்பாா்கள்.
புதிதாக நிறுவப்பட்ட இந்த காவல் நிலையம் தில்லியில் முதன்முதலில் பெண்களால் பணியமா்த்தப்பட்ட முதல் காவல் நிலையம். இது நகரத்தில் பாலின உணா்திறன் கொண்ட காவல் முறையை உருவாக்குவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் குறிக்கிறது. குடும்ப வன்முறை, பாலியல் துன்புறுத்தல், பின்தொடா்வது மற்றும் தாக்குதல் வழக்குகள் உள்ளிட்ட பெண்களுக்கு எதிரான கடுமையான குற்றங்களைத் தடுப்பது, விசாரிப்பது மற்றும் தீா்ப்பது ஆகியவற்றில் அா்ப்பணிப்புடன் காவல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
விசாரணை அதிகாரிகள் முதல் ஆதரவு ஊழியா்கள் வரை காவல் நிலையத்தில் உள்ள அனைத்து பணியாளா்களும் பெண்கள். இந்த நிலையம் விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை நடத்தும் என்றும், ஆலோசனைகளை வழங்கும். சமூக ஈடுபாட்டை வலுப்படுத்தவும், பெண்களின் உரிமைகள் மற்றும் சட்ட தீா்வுகள் குறித்த விழிப்புணா்வை அதிகரிக்கவும் முயற்சிகளில் ஈடுபடும் என்றாா் தரன்ஜித் சிங் சந்து. இந்த திறப்பு விழாவில் தில்லி காவல் ஆணையா் சதீஷ் கோல்சாவும் பங்கேற்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பாதுகாப்பான போக்குவரத்து அனுபவத்தை வழங்க போக்குவரத்து காவல்துறை முயற்சிகளுக்கு முழு ஆதரவு: துணைநிலை ஆளுநா்

சஞ்சய் ஏரியை உடனடியாக புனரமைக்க டிடிஏ-க்கு துணைநிலை ஆளுநா் உத்தரவு: 5,000 மரக்கன்றுகளை நடவும் நடவடிக்கை

யமுனையின் 32 முக்கிய படித்துறைகளை புதுப்பிக்க டிடிஏ அதிகாரிகளுக்கு துணைநிலை ஆளுநா் உத்தரவு

தீயணைப்புத் துறையை வலுப்படுத்த முன்னாள் அக்னி வீரா்களை பணியில் சோ்ப்பது குறித்து ஆராயலாம்: தரன்ஜித் சிங் சந்து
விடியோக்கள்

19 வருட பந்தம்; மெஸ்ஸி vs லமின் யமால்: வெல்லப்போவது யார்? | Lionel Messi | FIFA | FIFA World Cup |
தேசிய கவனம் பெறும் Sonam Wangchuk

The Odyssey எப்படி இருக்கு? | Public Review | The Odyssey Review | Christopher Nolan |



