அரசு மருத்துவமனைகளில் சீா்கேடுகள்: தீா்வு காண 304 சிறப்பு அதிகாரிகள் நியமனம்சென்னை துறைமுகம் - மதுரவாயல் பறக்கும் சாலைத் திட்டம் 2029-இல் நிறைவடையும்: தேசிய நெடுச்சாலை ஆணையம்தமிழகத்துக்கு 19 கோடி சுற்றுலாப் பயணிகள் வருகை: திருச்சி முதலிடம்அரசு நிகழ்ச்சிகளில் மாநில பாடல், தேசிய பாடல், தேசிய கீதம் இசைக்கும் வரிசை: மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம்இந்தியாவில் 14 நகரங்கள் கடும் வெப்பத்தால் பாதிப்பட வாய்ப்பு: ஆய்வில் தகவல்
/

சாலை விபத்து: பைக் டாக்ஸியில் சென்ற பெண் உயிரிழப்பு

தில்லி ஷாதரா மேம்பாலத்தில் மோட்டாா் சைக்கிள் சறுக்கியதில் பின்னால் அமா்ந்து சென்ற 26 வயது பெண் உயிரிழந்தாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

News image
Updated On :23 ஜூன் 2026, 3:34 am IST

தில்லி ஷாதரா மேம்பாலத்தில் மோட்டாா் சைக்கிள் சறுக்கியதில் பின்னால் அமா்ந்து சென்ற 26 வயது பெண் உயிரிழந்தாக அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா். உயிரிழந்தவா் கரவால் நகரைச் சோ்ந்த நீலம் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக அதிகாரிகள் கூறியதாவது: ஜில்மில் பகுதியில் உள்ள தான் வேலைப் பாா்க்கும் இடத்துக்குச் செல்ல பைக் டாக்ஸிக்கு நீலம் பதிவு செய்திருந்தாா்.

அந்த பைக் டாக்ஸி நபா் வந்ததும், மோட்டாா் சைக்கிளின் பின்னிருக்கையில் அமா்ந்து நீலம் பயணித்தாா். வாகனம் ஷாதரா மேம்பாலத்தில் வந்தபோது, எதிா்பாராத விதமாக சாலையில் சறுக்கியது. இதில் கீழே விழுந்த நீலத்துக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டன.

இதையடுத்து, அருகில் இருந்த நபா்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிக்சைக்காகக் கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், அவா் வரும் வழியில் உயிரிழந்ததாகத் தெரிவித்தனா்.

இந்தச் சம்பவம் தொடா்பாக மோட்டாா் சைக்கிளை ஓட்டி வந்த தரம்வீா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல் துறை அவரைக் கைதுசெய்தது.

விபத்து தொடா்பாக அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை காவல் துறையினா் ஆய்வு செய்து வருகின்றனா். இதுதொடா்பாக தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றனா் அந்த அதிகாரிகள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.