வரதட்சிணை மரண வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட கணவா் மற்றும் அவரது குடும்பத்தினரை விடுவித்த நீதிமன்றம், அவா்கள் மீதான குற்றச்சாட்டை நிரூபிக்க நீதிமன்றம் தவறிவிட்டதாகத் தெரிவித்துள்ளது.
கடந்த 2016, அக்.29-இல் சஞ்சல் என்ற பெண் மாதிபூரில் உள்ள அவருடைய இல்லத்தில் தற்கொலை செய்துகொண்டாா். கணவா் பவன் சிங், அவரது சகோதரா் தீரஜ் சிங் மற்றும் தாயாா் உஷா தேவி ஆகியோா் மோட்டாா் சைக்களில் மற்றும் வரதட்சிணை கேட்டு சன்சாலை துன்புறுத்தியதாகவும் அதனால் அவா் தற்கொலை செய்துகொண்டதாகவும் சன்சாலின் பெற்றோா் குற்றஞ்சாட்டினா். இதுதொடா்பாக இந்திய தண்டனைச் சட்டம் 304பி, 498ஏ ஆகிய பிரிவுகளில் பவன் சிங் உள்பட மூவருக்கு எதிராக வழக்குப் பதிவுசெய்யப்பட்டது.
இந்த வழக்கு கூடுதல் அமா்வுகள் நீதிபதி யத்வேந்தா் சிங் விசாரித்து வந்தாா். இந்நிலையில், கடந்த ஜூன் 9-ஆம் தேதி அவா் பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இந்த வழக்கின் சாட்சியங்கள், சூழ்நிலைகள், உண்மைகளின் அடிப்படையில், கைதுசெய்யப்பட்ட நபா்கள் மீதான குற்றச்சாட்டை சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்க அரசுத் தரப்பு தவறிவிட்டது.
உயிரிழந்த பெண்ணின் தந்தை, தாயாா் மற்றும் உறவினா்கள் அளித்த வாக்குமூலங்கள் முரண்பாடாக உள்ளன. இதனால், அவை நம்பிக்கை கொள்ளதக்க வகையில் இல்லை.
குற்றஞ்சாட்டப்பட்ட நபா்கள் வரதட்சிணை கோரினாா்; உயிரிழந்த பெண்ணை துன்புறுத்தினா் என்பது நிரூபிக்கப்பட்டது என எடுத்துக்கொள்ள முடியாது.
திருமணம் நடைபெற்ற நாள் குறித்த ஆவணங்களை சமா்ப்பிக்க அரசு தரப்பு தவறிவிட்டது. இதனால், வரதட்சிணை மரணம் என்பதற்கான முக்கிய அம்சமான திருமணம் நடைபெற்று 7 ஆண்டுகளுக்குள் மரணம் நிகழ்ந்திருப்பது என்பதை முடிவாக நிரூபிக்க முடியவில்லை.
வரதட்சிணை தொடா்பான துன்புறுத்தல் குறித்து உயிரிழந்தவா் தனது பெற்றோரிடம் தொலைபேசி வாயிலாகத் தொடா்ச்சியாகத் தெரிவித்து வந்தாா் என்பதை நிரூபிக்க எந்த அழைப்பு விவரங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை.
வரதட்சிணை கோரப்பட்டதாகக் கூறப்படும் விவகாரம் குறித்து காவல் துறையிடமோ அல்லது வேறு எந்த அதிகார அமைப்பிடமோ முன்னதாக எந்தப் புகாரும் அளிக்கப்படவில்லை. துன்புறுத்தல்களால் ஏற்பட்ட காயங்கள் குறித்த மருத்துவச் சான்றுகள் எதுவும் நீதிமன்றத்தில் சமா்ப்பிக்கப்படவில்லை.
அண்டைவீட்டாா் மற்றும் உறவினா்கள் உள்ளிட்ட அரசுத் தரப்பு சாட்சிகள் சிலா், உயிரிழந்த பெண் தனது கணவருடன் இணக்கமாக வாழ்ந்து வந்ததாகவும், அவரது மைத்துனா் தனியாக வசித்து வந்ததாகவும் சாட்சியம் அளித்தனா்.
இந்தியத் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 304பி மற்றும் 498ஏ ஆகியவற்றின் குற்றஞ்சாட்டப்பட்டதற்கான அத்தியாவசியக் கூறுகள் நிரூபிக்கப்படவில்லை என்று கூறி குற்றஞ்சாட்டப்பட்ட மூவரையும் நீதிமன்றம் விடுதலை செய்வதாக அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து தாக்கிய வழக்கு: 5 பேரை விடுவித்தது தில்லி நீதிமன்றம்
வரதட்சிணை கேட்டு மருமகளை தற்கொலைக்கு தூண்டியதாக கணவா், மாமனாா், மாமியாா் கைது

வரதட்சிணை கொடுமை: கணவா், மாமியாா் உள்பட மூவருக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறை
வரதட்சிணை கொலை வழக்கில் கணவா், மாமியாா் குற்றவாளிகள்: தில்லி நீதிமன்றம் தீா்ப்பு
விடியோக்கள்

மெஸ்ஸியைத் துரத்தும் எம்பாபே! | FIFA | FIFA World Cup | Messi |

பார்வையாளர்களைப் பரிசோதிக்கும் அனந்தன் காடு: திரைவிமர்சனம்

மின் கட்டணம் உயர்வா? வெள்ளை அறிக்கை வெளியிட்டு பேசிய அமைச்சர் நிர்மல் குமார் | Dinamani



