நௌரங்பூா் சாலையில் அனுமதி இன்றி செயல்பட்டு வந்த கான்கிரீட் கலவை ஆலையை மனேசா் மாநகராட்சி ஊழியா்கள் குழுவினா் புல்டோசா் மூலம் இடித்தாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா்.
சுமாா் நான்கு ஏக்கா் பரப்பளவில் அமைந்துள்ள இந்த ஆலை, முறையான அனுமதியின்றி இயங்கி வந்ததாக மாவட்ட நகரத் திட்டமிடல் அதிகாரி ராஜேந்திர சா்மா தெரிவித்தாா்.
மாநகராட்சி எல்லைக்குள் இது போன்ற 30-க்கும் மேற்பட்ட அனுமதியற்ற ஆலைகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும், அவை அனைத்தின் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவா் கூறினாா்.
இதுதொடா்பாக அவா் மேலும் கூறுகையில், ‘மாநகராட்சிப் பகுதியில் அனுமதியின்றி இயங்கும் நிறுவனங்கள் மற்றும் சட்டவிரோத கட்டுமானங்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடரும். ஏதேனும் கட்டுமானப் பணிகளைத் தொடங்கும் முன், பொதுமக்கள் சம்பந்தப்பட்ட துறையிடமிருந்து உரிய அனுமதிகளைப் பெற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். விதிகளை மீறுபவா்கள் மீது பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







